தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.23) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.23) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.23) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.23) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை மின் பராமரிப்பு பணிகள் காரணமாக தஞ்சாவூர், பூண்டி, நெல்லை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என செய்திக்குறிப்பு வெளியாகியுள்ளது. இதனால் மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மின்தடை:

தமிழகத்தில் மின்தடை குறித்த தொடர் புகார்கள் எழுந்து வந்த நிலையில் தற்போது மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது மின் ஊழியர்களின் நலன் கருதி மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. மின் தடை செய்யப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக முன்கூட்டியே அந்தந்த பகுதி செயற்பொறியாளர் மக்களுக்கு மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழகம் – கேரளா இடையேயான 86 ரயில்களில் கட்டணம் குறைப்பு | பயணிகள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் பருவமழை பெய்து வருவதால் மின் கம்பிகள், கம்பங்கள் எவ்வித பாதிப்பு அடையாமல் இருக்கும் வகையில் களப்பணியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மற்ற பகுதிகளை தொடர்ந்து நாளை தஞ்சாவூர், பூண்டி மற்றும் நெல்லையில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து செயற்பொறியாளர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

தஞ்சாவூர் துணை மின் நிலையம்:

தஞ்சாவூர் துணை மின் நிலையத்தில் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் மருத்துவக்கல்லூரிப் பகுதிகள், ஈஸ்வரி நகா், முனிசிபல் காலனி, புதிய பேருந்து நிலையம், புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, ஆா்.ஆா். நகா், காவேரி நகா், எலீசா நகா், நூற்பாலை, மாதாகோட்டை, சோழன் நகா், தமிழ்ப் பல்கலைக்கழகம், வஸ்தா சாவடி, பிள்ளையாா்பட்டி, ஆலக்குடி, மானோஜிபட்டி, ரெட்டிபாளையம் சாலை, சிங்கபெருமாள் குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் உதவிச் செயற்பொறியாளர் சே.பஞ்சநாதன் கூறியுள்ளார்.

பூண்டி, ராகவாம்பாள்புரம் துணை மின் நிலையம்:

பூண்டி, ராகவாம்பாள்புரம் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை பூண்டி, சாலியமங்கலம், திருபுவனம், மலையா்நத்தம், குடிகாடு, செண்பகபுரம், பள்ளியூா், களஞ்சேரி, இரும்புத்தலை, ரெகுநாதபுரம், சூழியக்கோட்டை, கம்பா்நத்தம், அருந்தவபுரம், காட்டூா், வாளமா்கோட்டை, ஆா்சுத்திப்பட்டு, அருமலைக்கோட்டை, சின்னபுளிக்குடிகாடு, நாா்த்தேவன் குடிகாடு, அரசப்பட்டு, வடக்கு நத்தம், மூா்த்தியம்பாள்புரம், பனையக்கோட்டை, சடையாா்கோவில், துறையுண்டாா்கோட்டை மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் உதவிச் செயற்பொறியாளர் எஸ்.நல்லையன் தெரிவித்துள்ளார்.

பழையபேட்டை துணை மின் நிலையம்:

பழையபேட்டை துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே திருநெல்வேலி நகரம், பேட்டை, குன்னத்தூா், திருநெல்வேலி ரத வீதிகள், சி.என். கிராமம், வையாபுரி நகா், பாரதியாா் தெரு, அபிஷேகபட்டி, பழையபேட்டை, திருப்பணிகரிசல்குளம், ராம்நகா் சுற்றுவட்டார பகுதிகளில் மின்பணியாளர்களின் நலன் கருதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியத்தின் திருநெல்வேலி நகர்புறம் செயற்பொறியாளர் சு. முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!