அரசு ஊழியர்களுக்கு ரூ.15,000 சம்பள உயர்வு – மகிழ்ச்சியில் பணியாளர்கள்! சூப்பர் அறிவிப்பு!

0
அரசு ஊழியர்களுக்கு ரூ.15,000 சம்பள உயர்வு - மகிழ்ச்சியில் பணியாளர்கள்! சூப்பர் அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு ரூ.15,000 சம்பள உயர்வு - மகிழ்ச்சியில் பணியாளர்கள்! சூப்பர் அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு ரூ.15,000 சம்பள உயர்வு – மகிழ்ச்சியில் பணியாளர்கள்! சூப்பர் அறிவிப்பு!

மத்திய அரசின் கீழ் செயல்படுகின்ற ரயில்வே துறையில் பணிபுரிபவர்களுக்கு 15 ஆயிரம் சம்பளம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இதனால் ரயில்வே ஊழியர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

சம்பள உயர்வு:

மத்திய அரசின் கீழ் ரயில்வே துறை இயங்கி வருகிறது. இத்தகைய ரயில்வே துறைக்கு மத்திய அரசால் நடத்தப்படும் RRB, RRC மற்றும் NTPC போன்ற இன்னும் சில தேர்வுகள் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கு 3 கட்ட தேர்வுகள் நடத்தப்படும். இவ்வாறாக தேர்வு செய்யப்பட்டு ரயில்வே துறையில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்களுக்கு கொரோனா காலகட்டத்தில் பொருளாதார நிதி நெருக்கடி காரணமாக அகவிலைப்படி, போக்குவரத்துப்படி மற்றும் பிற படிகள் பிடித்தம் செய்யப்பட்டு அடிப்படை ஊதியம் மட்டுமே அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. மேலும் வீட்டு வாடகைப் படி 24 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. தற்போது ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை – ஆணையர் உத்தரவு!

இந்தியன் ரயில்வே துறையில் பணியாற்றி வரும் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பல்வேறு விதமான பதவிகளுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது, RBSS எனப்படும் ரயில்வே வாரிய செயலக சேவை / RBSSS எனப்படும் ரயில்வே வாரிய செயலக ஸ்டெனோகிராபர் சேவையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு பதவி மற்றும் சம்பள உயர்வு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களுக்கு பதவி உயர்வு வகையில் தனிச் செயலாளர் ரேங்கில் இருந்து செயலாளர் அல்லது துணை இயக்குநருக்கு கீழ் பதவி வகிக்கக்கூடிய ரேங்கிற்கு உயர்த்தப்படவுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அவர்களது வழக்கமான ஊதியத்திலிருந்து ரூ.15,000 உயர்த்தப்பட்டு ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது அவர்களது மாத ஊதியம் ரூ.67,700 லிருந்து ரூ.15 ஆயிரம் உயர்த்தப்பட்டு ரூ.78,800 ஆக வழங்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

IRCTC மூலம் சேவைக் கட்டணம் இல்லாமல் பஸ் டிக்கெட் புக்கிங் – சூப்பர் அறிவிப்பு!

இதனை தொடர்ந்து அகவிலைப்படியானது மேலும் 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 31 சதவீதமாக வழங்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. மேலும் அரசு ஊழியர்களின் குழந்தைகளின் கல்வி படித்தொகையை உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளும் வகையில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனா சூழல் நிலவி வருவதால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆவணங்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஆவணங்கள் ஏதும் இன்றி குழந்தைகளுக்கான கல்வி படியை பெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இத்தகைய நடவடிக்கையை இந்தியன் ரயில்வேயில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!