பொதுத்துறை காப்பீட்டு நிறுவன ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு – நிதியமைச்சகம் தகவல்!

0
பொதுத்துறை காப்பீட்டு நிறுவன ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு - நிதியமைச்சகம் தகவல்!
பொதுத்துறை காப்பீட்டு நிறுவன ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு - நிதியமைச்சகம் தகவல்!
பொதுத்துறை காப்பீட்டு நிறுவன ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு – நிதியமைச்சகம் தகவல்!

அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு வழங்கப்படுவது குறித்து இன்னும் சில தினங்களில் அறிவிப்பு வெளியிடப்படும் என நிதியமைச்சக வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஊதிய உயர்வு:

அரசின் கீழ் பல்வேறு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதாவது The National Insurance, The New India Assurance, The United India Insurance and The Oriental Insurance போன்ற பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் அரசின் கீழ் இயங்கி வருகின்றன. இந்த பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் சுமார் 60 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பொதுவாக அரசின் கீழ் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட காலங்களுக்கு பிறகு ஊதிய உயர்வு வழங்கப்படும்.

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு – அரசாணை வெளியீடு!

அந்த வகையில் பொதுத்துறை காப்பீட்டு நிறுவன ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. அதன் பிறகு இன்னும் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. மீண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசு ஊழியர்களின் 18 மாத நிலுவை அகவிலைப்படி (DA) – முழு விவரங்கள்!

பொதுத்துறை வங்கிகளும், LIC நிறுவனமும் ஏற்கெனவே ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்துள்ளது. அதனால் பொதுத்துறை காப்பீட்டு நிறுவன ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குமாறு வலியுறுத்தப்பட்டு வந்தது. அவர்களது கோரிக்கையை அரசு ஏற்று தற்போது பொதுத்துறை காப்பீட்டு நிறுவன ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஊதிய உயர்வினால் 60 ஆயிரம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என்று நிதியமைச்சகம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!