இன்று & நாளை 144 தடை உத்தரவு அமல் – காவல்துறை அதிரடி!

0
இன்று & நாளை 144 தடை உத்தரவு அமல் - காவல்துறை அதிரடி!

விவசாயிகள் நடத்தும் போராட்டத்தின் விளைவாக அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் காவல்துறையானது இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவை நகரில் அமல்படுத்தி உள்ளது.

144 நாள் தடை உத்தரவு:

நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா பகுதிகளில் விவசாயிகள் கடந்த டிசம்பர் மாதம் முதல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நகர மேம்பாட்டு பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு ஈடாக அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தின் ஒரு பகுதியாக பாராளுமன்றத்தை நோக்கி எதிர்ப்பு பேரணியை பிப்ரவரி 7 மற்றும் 8ம் தேதிகளில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதன் காரணமாக அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144 கீழ் பிப்ரவரி 7 மற்றும் 8ம் தேதி நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா ஆகிய இரண்டு பகுதிகளுக்கும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

UPI பண பரிவர்த்தனை முடக்கம் – பயனர்கள் அவதி!!

விவசாயிகளின் போராட்டம் காரணமாக மக்களுக்கான மாற்று வழிப் பாதைகளையும் போக்குவரத்து போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். போக்குவரத்து மாற்றம் தொடர்பான விபரங்களை 9971009001 என்ற ஹெல்ப்லைன் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றும் அரசு அதிகாரப்பூர்வமாக அறிக்கைகளை வெளியிட்டு உள்ளது. 144 தடை உத்தரவின்படி நகரில் 5க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடுவதையும், மதம் மற்றும் அரசியல் ஊர்வலங்களையும் தடை செய்யும் கட்டுப்பாடுகளும் அமலுக்கு வந்துள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!