தமிழக அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – ரூ.14 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - ரூ.14 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - ரூ.14 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – ரூ.14 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு!

தமிழகத்தில் அரசு ஊழியர்களின் உடல் நலன் கருதி மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அரசு ஊழியர்களின் குடும்பத்தினரும் பயன்பெறும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

மருத்துவ காப்பீடு:

தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில் பெரும்பாலானோர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு நல திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் அரசு ஊழியர்களின் உடல் நலன் கருதி தமிழக அரசு மருத்துவ காப்ப்பீட்டு திட்டத்தை கடந்த 2016ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் ரூ.4 லட்சம் மதிப்பிலான மருத்துவ சிகிச்சை மற்றும் குறிப்பிட்ட சில நோய்களுக்கு ரூ.10 லட்சம் அளவிலான அறுவை சிகிச்சை வழங்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.

ஜன.15 முதல் முழு ஊரடங்கு அமல், பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

தமிழக அரசின் இந்த காப்பீட்டு திட்டமானது பொதுத்துறை நிறுவனமான யுனெட்டட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் செல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த காப்பீட்டு திட்டம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டோடு முடிவடைகிறது. அதனால் மீண்டும் யுனெட்டட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி தேர்வு செய்யப்பட்டு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ஜூலை 1ம் தேதி முதல் வரும் 2025 ஜூன் 30ம் தேதி வரை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்? பிரதமர் மோடி தீவிர ஆலோசனை!

மேலும் இந்த மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்லாது அவரது வாரிசுகளுக்கு அதாவது அவரது மகன் அல்லது மகள் இருந்தால் அவர்களுக்கும் மருத்துவ சிகிச்சை வழங்கும் விதமாக கூடுதல் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ காப்ப்பீட்டு திட்டத்தில் பயன்பெற அரசு ஊழியர்களின் குழந்தைகள் 25 வயதை கடந்த வேலை இல்லாத மற்றும் திருமணமாகாதவர்களாக இருத்த அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கொரோனா பேரிடர் காலத்தில் அரசின் இத்தகைய புதிய திட்டம் அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here