நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்? பிரதமர் மோடி தீவிர ஆலோசனை!

0
நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்? பிரதமர் மோடி தீவிர ஆலோசனை!
நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்? பிரதமர் மோடி தீவிர ஆலோசனை!
நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்? பிரதமர் மோடி தீவிர ஆலோசனை!

நாடு முழுவதும் தற்போது உருமாறிய கொரோனா வகை தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்த தொற்று பரவல் காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

பிரதமர் ஆலோசனை:

நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று தற்போது தீவிரமாக பரவி வருகிறது. அவ்வாறு ஓமைக்ரான் தொற்று பரவி வருவதை தொடர்ந்து கொரோனா தொற்றும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 616 பேருக்கு ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இதுவரை ஓமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 623 ஆக அதிகரித்துள்ளது.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய தாமரைக்கு ஏற்பட்ட சோகம் – ரசிகர்கள் ஷாக்!

இத்தகைய உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று பரவலை தொடர்ந்து இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 1 லட்சத்துக்கு அதிகமாக பரவி வருகிறது. இவ்வாறு பரவி வரும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்த நிலையில் இருந்து வருகிறது. அதனால் தற்போது கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் ஜனவரி 11 முதல் முழு ஊரடங்கு நீட்டிப்பு, இ-பாஸ் அமல்? முதல்வர் இன்று ஆலோசனை!

இந்த ஆலோசனை முடிவில் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்துதலை தீவிரப்படுத்துமாறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பாரத பிரதமர் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு நடத்தப்பட்ட ஆலோசனை முடிவில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதே போல் இந்த ஆண்டும் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!