12ம் வகுப்பு தேர்ச்சி போதும் – இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு! விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
12ம் வகுப்பு தேர்ச்சி போதும் - இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு! விண்ணப்பங்கள் வரவேற்பு!
12ம் வகுப்பு தேர்ச்சி போதும் - இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு! விண்ணப்பங்கள் வரவேற்பு!
12ம் வகுப்பு தேர்ச்சி போதும் – இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு! விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து இந்திய ராணுவத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக இளைஞர்கள் பல்வேறு வேலைவாய்ப்புகளை இழந்தனர். தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து இந்திய ராணுவத்தில் Clerk, MTS உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக இருக்கும் இடத்தை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் cdm.ap.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பதிவு செய்ய வேண்டும்.

மீண்டும் அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் – அரசு முக்கிய முடிவு!

மேலும் இதில் Clerk பணிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சியும் மற்றும் MTS பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். இவ்விரண்டு பணிக்கும் குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 25 வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் இதில் சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகளும் வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து இப்பணியில் நியமிக்கப்படுவர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையின் படி Clerk பணிக்கு 19,900 முதல் 63,200 வரை மாத சம்பளமாக வழங்கப்படுகிறது. அத்துடன் MTS பணிக்கு 18,000 முதல் 56,900 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

தமிழகம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்? பொதுமக்கள் அதிர்ச்சி!

இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்

1. முதலாவதாக College of Defence Management என்பதன் cdm.ap.nic.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. இதில் உள்ள VACANCY IN POST OF LDC & MTS என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

3. இப்போது ஒரு PDF திறக்கப்படும். அதில் உள்ள வழிமுறைகளை படித்து அதன்பின் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

4. இந்த விண்ணப்ப படிவத்தை நிரப்பிய பிறகு அந்த படிவத்துடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் மேலும் விண்ணப்ப படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களையும் சேர்த்து இணைக்க வேண்டும்

5. இந்த பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை த காலேஜ் ஆஃப் டிஃபென்ஸ் மேனேஜ்மென்ட், சைனிக்புரி, செகந்திராபாத், தெலுங்கானா மாநிலம் – 500 094 என்ற முகவரிக்கு வருகிற மார்ச் 7ம் தேதிக்குள் பதிவு தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!