மீண்டும் அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் – அரசு முக்கிய முடிவு!

0
மீண்டும் அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் - அரசு முக்கிய முடிவு!
மீண்டும் அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் - அரசு முக்கிய முடிவு!
மீண்டும் அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் – அரசு முக்கிய முடிவு!

சமீப காலமாக சீனாவின் ஹாங்காங் நகரத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரசை தடுக்க போதுமான அளவு கட்டுப்பாடுகளை விதிக்க அரசு முடிவு செய்துள்ளதாக மூத்த ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்த விவரங்களை இப்பதிவில் காணலாம்.

முழு ஊரடங்கு

சீனாவின் முக்கியமான நகரங்களில் ஒன்றான ஹாங்காங்கில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கு முன்னதாக கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாட்டை கருத்தில் கொண்டு பல்வேறு சீன நகரங்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து ஹாங்காங் நகரத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க அரசு முக்கிய முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

BB Ultimate Promo | தாமரையுடன் வம்பிற்கு சென்ற சுஜா, பெரிதான பாடல் பிரச்சனை!

இது குறித்து ஹாங்காங் நகரத்தின் விவகாரங்களுக்கு பொறுப்பான சீனாவின் ஸ்டேட் கவுன்சில் அலுவலகம், ‘வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் மாறுபாட்டால் ஹாங்காங்கில் ஏற்பட்டுள்ள புதிய பாதிப்புகளை குறித்து அரசு அக்கறை கொண்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் தெற்கு குவாங்டாங் மாகாணத்தில், மத்திய மற்றும் பிராந்திய சுகாதார அதிகாரிகளுடன் சந்திப்புகளை மேற்கொண்டு முடிவு எடுக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளது.

வைரலாகும் “பாரதி கண்ணம்மா” ரோஷினியின் நடன வீடியோ – குவியும் லைக்குகள்!

இதற்கிடையில் சீனக் கொள்கை ஆலோசகர்கள் மற்றும் மாநில ஊடகங்கள், பெய்ஜிங் பூஜ்ஜிய கொரோனா கொள்கையை நிலைநிறுத்த தவறியதற்காக தலைமை நிர்வாகி கேரி லாம் தலைமையிலான ஹாங்காங் அரசாங்கத்தை கடந்த வாரத்தில் பகிரங்கமாக விமர்சித்தனர். இப்போது ஹாங்காங்கை விட அதிக மக்கள் தொகை கொண்ட சில முக்கிய நகரங்களில் இதே போன்ற பாதிப்புகளை கவனத்தில் கொண்டு கடுமையான ஊரடங்குகள் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், சியான், தியான்ஜின் மற்றும் இது போன்ற பிற பெரிய சீன நகரங்களில் சமீபத்தில் அமல்படுத்தப்பட்டதை போன்ற ஒரு ஊரடங்கை அமல்படுத்த ஆலோசிக்கப்படும் என்று ஹாங்காங் அரசாங்கத்தின் மூத்த ஆலோசகர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். இப்போது ஹாங்காங் சட்டமியற்றுபவர்கள் அனைவரும் நகரத்தில் மருத்துவ வசதியை விரிவுபடுத்துவதில் சீன அரசாங்கத்தின் உதவியை ஏற்குமாறு வலியுறுத்தி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here