மத்திய அரசு ஊழியர்களுக்கு இனி 12 மணிநேரம் வேலை அமல்? முக்கிய தகவல் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு இனி 12 மணிநேரம் வேலை அமல்? முக்கிய தகவல் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு இனி 12 மணிநேரம் வேலை அமல்? முக்கிய தகவல் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு இனி 12 மணிநேரம் வேலை அமல்? முக்கிய தகவல் இதோ!

இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு தொழிலாளர்களுக்கான 4 சட்டங்களை உள்ளடக்கிய விதிகளை மத்திய அரசு நாடாளுமன்ற இரு அவையிலும் கொண்டு வந்தது. அதன்படி தற்போது இதனை அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் செயல்படுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஊழியர்கள் வேலை நேரம்

இந்தியாவில் தற்போது அனைத்து தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் தினமும் 8 மணி நேர வேலை பார்த்து வருகின்றனர். அதன்படி வாரத்துக்கு 6 நாட்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையை அரசு மாற்ற வேண்டும் என்றும் ஊழியர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிட வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி கடந்த 2019ம் ஆண்டு தொழிலாளர்களுக்கான 4 சட்டங்களை மத்திய அரசு நாடாளுமன்ற இரு அவையிலும் நிறைவேற்றியது. ஆனால் இன்னும் இதனை நடைமுறைபடுத்தவில்லை.

தமிழகத்தில் பிப்.15க்கு பின் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? முதல்வர் முக்கிய ஆலோசனை!

மேலும் அரசு ஊழியர்களுக்கு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் வாரத்தில் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். இதனால் பொதுமக்கள் அரசின் சேவைகளை பெறுவதில் காலதாமதம் ஏற்படும். அதனால் இந்த திட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் இந்த புதிய திட்டத்தை தனியார் நிறுவனங்களில் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த புதிய நடைமுறை தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் வேலை நேரம், சம்பளம் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று உணர முடிகிறது.

மீண்டும் அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் – அரசு முக்கிய முடிவு!

இதனை தொடர்ந்து இந்த புதிய நடைமுறையை அரசு நிறுவனங்களுக்கும் விரைவில் அமல்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவர் கேள்வி கேட்டதாவது, அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தப்படுமா என்ற கேள்விக்கு இது போன்ற திட்டம் எதையும் மத்திய அரசு பரிசீலனை செய்யவில்லை என்று மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்கள் பதில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here