12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் – கால தாமதம்.. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்!

0

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் – கால தாமதம்.. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்!

தமிழகத்தில் நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 5-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி தள்ளி போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தேர்வு முடிவுகள்:

தமிழகத்தில் 2022 2023 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் மொழித்தேர்வில் தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை தேர்வுகள் வழக்கமான கால இடைவெளியில் நடைபெற்று முடிந்தது. சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் இந்த தேர்வு எழுதினர்.

பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகிய கோபி – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இதில் மொழி பாடத்தேர்வில் 50,000 மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை என்பது கண்டறியப்பட்டு அதற்கான காரணம் குறித்து ஆராயப்பட்டது. இவர்கள் விரைந்து மறு தேர்வினை எழுதுவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் மே-5ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதில் கால தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனெனில் நீட் தேர்வு முடிவடைந்த பிறகு 12ம் தேர்வு முடிவுகளை வெளியிடுவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வந்துள்ளது. அதனால் தேர்வு முடிவுகள் வெளியாகுவதில் காலதாமதம் ஆகும் என பள்ளிகல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!