நடப்பு நிகழ்வுகள் – 11 ஆகஸ்ட் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 11 ஆகஸ்ட் 2023
நடப்பு நிகழ்வுகள் - 11 ஆகஸ்ட் 2023
நடப்பு நிகழ்வுகள் – 11 ஆகஸ்ட் 2023

தேசிய செய்திகள்

“என் மண் என் நாடு” என்ற முன்னெடுப்பானது அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தொடங்கப்பட்டுள்ளது.

  • அந்தமான் மற்றும் நிக்கோபார் யூனியன் பிரதேசத்தில் என் மண் என் நாடு என்ற முன்னெடுப்பு பிரச்சாரமானது ஆகஸ்ட் 10 அன்று அதன் தலைநகரமான போர்ட் பிளேயரில் தொடங்கப்பட்டுள்ளது.
  • மேலும் போர்ட் பிளேயர் நகராட்சி கவுன்சிலானது அதன் அலுவலக கட்டிட வளாகத்தில் இருந்து காந்தி பூங்கா வரை இதன் முக்கிய நோக்கத்தை பொது மக்களுக்கு விழிப்புணர்வை பரப்புவதற்காக அதன் யாத்திரையானது தொடங்கப்பட்டுள்ளதாகும். இந்த முன்னெடுப்பானது 75 மரக்கன்றுகளை நட்டு இந்த யாத்திரையை நகராட்சி தலைவர் செசி. தில்குஷ் மீனா கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.

கடலோர மீன்வளர்ப்பு ஆணைய திருத்த மசோதா 2023 ஆனது மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  • கடலோர மீன்வளர்ப்பு ஆணைய திருத்த மசோதா 2023 ஆனது பாராளுமன்ற மாநிலங்களவையானது ஆகஸ்ட் 09 அன்று ஒப்புதல் அளித்து நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. மேலும் இந்த திருத்த மசோதாவானது மக்களவையில் ஆகஸ்ட் 07 அன்று நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
  • இந்த மசோதாவானது “கடலோர மீன்வளர்ப்பு ஆணைய சட்டம், 2005-ஐ திருத்துவதாக அமைகிறது. இதன் மூலம் கடலோர மீனவர்களுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டு அதன் மூலம் மீனவர் சமுதாயமானது முன்னேறும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகமானது கடற்படையுடன் கூடிய இருதரப்பு பயிற்சியை மேற்கொள்கிறது.

  • INS விசாகப்பட்டினம் மற்றும் INS திரிகண்ட் ஆகிய இரண்டு இந்திய கடற்படைக் கப்பல்களும் கடந்த ஆகஸ்ட் 09 அன்று UAE இன் துபாயில் உள்ள ரஷித் துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளன. ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 11 வரை இந்தப் பயிற்சியானது நடைபெற திட்டமிட்டுள்ளது.
  • இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான  இருதரப்பு கடற்படை பயிற்சியான ‘சயீத் தல்வார்’ ஆனது அந்த இரு நாடுகளுக்கிடையேயான பிராந்திய பாதுகாப்பிற்கு பங்களிக்கும் வகையிலும், அதன் ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் வகையிலும் இந்த கூட்டு ராணுவ கடற்படை பயிற்சியானது தொடங்குகிறது.

2023 ஆம் ஆண்டிற்கான மலபார் கூட்டு கடற்படை பயிற்சியானது தொடங்கியுள்ளது.

  • இந்திய கடற்படையின் உள்நாட்டு போர்க்கப்பல்களான INS கொல்கத்தா மற்றும் INS சஹ்யாத்ரி ஆகியன ஜப்பான் கடல்சார் தற்காப்பு படை (JMSDF) மற்றும் அமெரிக்க கடற்படை(USN) கப்பல்கள் மற்றும் விமானங்களுடன் இணைந்து ராயல் ஆஸ்திரேலிய கடற்படையுடன்(RAN) “மலபார்” என்ற கூட்டு ராணுவ கடற்படை பயிற்சியை தொடங்கியுள்ளது.
  • இந்த கூட்டு கடற்படை பயிற்சியானது ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 21 வரை ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மலபார் கடற்படை பயிற்சியானது 1992 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இருநாட்டு கடற்படைக்கும் இடையேயான இருதரப்பு கூட்டு கடற்படை பயிற்சியாக தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

மாநிலங்களவையில் அரசியலமைப்பின் பட்டியலிடப்பட்ட சாதிகளுக்கான ஆணைய திருத்த மசோதா 2023 ஆனது நிறைவேற்றப்பட்டுள்ளது.

  • ஆகஸ்ட் 09 அன்று பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் அரசியலமைப்பின் பட்டியலிடப்பட்ட சாதிகளுக்கான ஆணைய திருத்த மசோதா 2023க்கு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இந்த மசோதாவிற்கு மக்களவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
  • இந்த மசோதாவானது சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள பட்டியல் சாதிகளின் அதிகார பட்டியலை மாற்றியமைக்கும் அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதிகள்) விதி 1950 ஐ நிறுத்துவதாக அமைகிறது. மேலும் இது சத்தீஸ்கரில் உள்ள மஹ்ரா மற்றும் மஹாரா உட்பட பல சமூகங்களை இந்த மசோதா உள்ளடக்கியுள்ளதாகும்.

சர்வதேச செய்திகள்

13வது சட்டத்திருத்தம் மற்றும் மத்திய அதிகாரப் பகிர்வுக்கான திட்டங்களை இலங்கை ஜனாதிபதி அறிமுகப்படுத்தியுள்ளார்.

  • தென்னிந்தியாவுடனான இலங்கை தீவின் வடக்குப் பகுதிகளுக்கு இடையிலான கடல் மற்றும் விமான இணைப்பை மேம்படுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான படகு சேவையை மீண்டும் ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் பாராளுமன்றத்தில் ஆகஸ்ட் 09 அன்று அந்நாட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
  • நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் 13வது திருத்தத்தை அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அதை அடைவதற்கு நாட்டில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்து அவசியம் என்றும் அவர் வாதிட்டார். மேலும் 1987ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனே ஆகியோர் இடையில் கையெழுத்திட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 13வது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசனையின் பேரில், தேசிய சட்டமன்றத்தை கலைக்க அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.

  • பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அந்நாட்டு தேசிய சட்டமன்றத்தை கலைப்பதற்கான ஆலோசனை அணையை ஆகஸ்ட் 08 அன்று அனுப்பியதை தொடர்ந்து பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி ஆகஸ்ட் 09 அன்று இரவு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
  • பாகிஸ்தானில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் அரசாங்கமானது தனது ஐந்தாண்டு அரசியலமைப்பு பதவிக்காலத்தை நிறைவு செய்துள்ள நிலையில் இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் இதற்குமுன்பு பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் படி பதவி விலகியதை தொடர்ந்து இந்த பதவிக்கு இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மாநில செய்திகள்

உலக சிங்க தினத்தை முன்னிட்டு சிங்கத்திற்கான புதிய கீதம் மற்றும் சின் சுச்னா என்ற இணைய செயலியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  • உலக சிங்க தினம் ஆகஸ்ட் 10 அன்று கொண்டாடப்படுவதை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் அம்மாநில முதல்வர் சிங்கத்திற்கான புதிய கீதம் மற்றும் சின் சுச்னா என்ற இணைய மற்றும் கைபேசி செயலியை வெளியிட்டுள்ளார்.
  • மேலும் இந்தியாவின் குஜராத்தின் கிர் தேசியப் பூங்காவானது உலகிலேயே ஆசிய சிங்கங்களின் ஒரே இயற்கை சரணாலயம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இங்கு வனத்துறை மற்றும் பொது மக்களின் சீரிய தொடர் முயற்சியைத் தொடர்ந்து, ஜூன் 2020 யின் நிலவரப்படி அங்கு உள்ள ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கையானது 674 ஆக உயர்ந்துள்ளது என்பது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தானில் இந்திரா காந்தி திறன்பேசி திட்டமானது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

  • ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் ஆகஸ்ட் 10 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் இந்திரா காந்தி திறன்பேசி திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். 
  • இத்திட்டத்தின் படி, மாநிலத்தில் உள்ள 1.3 கோடி பெண்களுக்கு, மூன்று ஆண்டு காலத்திற்கு தேவையான இணையதள வசதியுடன் கூடிய இலவச கைபேசியானது விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் திரு. கெஹ்லாட் “டிஜிட்டல் சக்கி” என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நர்மதா ஆற்றங்கரையில் 80 மெகாவாட் திறனுக்கான திட்டத்தை இந்துஜா ரினியூவபிள்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

  • மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஓம்காரேஷ்வரில் உள்ள நர்மதா ஆற்றங்கரையில் உலகின் மிகப்பெரிய மிதக்கும் சோலார் பூங்காவை அமைப்பதற்காக இந்துஜா ரினியூவபிள்ஸ் நிறுவனம் மற்றும் அம்மாநில அரசிற்கிடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
  • ஆகஸ்ட் 09 அன்று வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் இது மத்திய பிரதேச உர்ஜா விகாஸ் நிகாம் நிறுவனம் மற்றும் இந்திய சூரிய எரிசக்தி கழகத்தின் கூட்டு முயற்சி என்று குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் 80 மெகாவாட் மின்சாரத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு இந்த ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகும்.

நுகர்வோர் தயாரிப்பு நிறுவனமான கோத்ரெஜ் ரூ 515 கோடியை தமிழகத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

  • நாட்டின் புகழ்பெற்ற நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனமான கோத்ரேஜ், தமிழ்நாட்டில் அதன் முக்கிய உதிரி பாகங்கள் மற்றும் நுகர்வு பொருட்களை உற்பத்தி செய்யும் வகையில் ஒரு தொழிற்சாலையை அமைக்க 515 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்காக அம்மாநில அரசாங்கத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஆகஸ்ட் 10 அன்று கையெழுத்திட்டுள்ளது.
  • உடல் சம்பத்தப்பட்ட பராமரிப்பு பொருட்களை உற்பத்தி செய்வதற்காக செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்த நிறுவனத்தின் உற்பத்தி அலகு அமைக்கப்படும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா அறிவித்துள்ளார்.

நியமனங்கள்

பம்பாய் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக மஞ்சுஷா தேஷ்பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.

  • பம்பாய் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக வழக்கறிஞரான மஞ்சுஷா அஜய் தேஷ்பாண்டே அவர்களுக்கு, ஆகஸ்ட் 10 அன்று பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அறிவித்துள்ளார்.
  • இவர் இரண்டு வருட காலத்திற்கு இந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை கொலீஜியம் அமைப்பு சமீபத்திய ஆணையில் பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதை பரிந்துரை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விருதுகள்

ஜியோ ஹாப்டிக் நிறுவனமானது 2023 ஆம் ஆண்டின் செயற்கை நுண்ணறிவுக்கான தொழில்நுட்ப தொடக்க விருதை வென்றுள்ளது.

  • மதிப்புமிக்க 13 வது ஆண்டு தொழில்முனைவோர் இந்தியா விருது வழங்கும் நிகழ்ச்சியில், ஜியோ ஹாப்டிக் நிறுவனமானது 2023 ஆம் ஆண்டின் செயற்கை நுண்ணறிவுக்கான தொழில்நுட்ப தொடக்க விருதை ஆகஸ்ட் 10 அன்று பெற்றுள்ளது. 
  • 1000 மற்ற உள்ளீடு நிறுவனங்களிலிருந்து செயற்கை நுண்ணறிவின்(AI) இந்த ஆண்டிற்கான ஸ்டார்ட்அப் வெற்றியாளராக Jio Haptik நிறுவனமானது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் புதுமைக்கான தொழில்துறை அளவுகோலை அமைக்கும் உந்துதல் தீர்வுகளை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்காக இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளதாகும்.

சரஸ்வோடி அமெரிக்காவின் உயரிய GARC விருதைப் பெற்றுள்ளார்.

  • அமெரிக்க வெளியுறவுத்துறை செயலரான ஆண்டனி பிளிங்கன், நேபாளத்தின் புகழ்பெற்ற சமூக ஆர்வலரான சரஸ்வோடிக்கு 2023 ஆம் ஆண்டின் உலகளாவிய இனவெறி எதிர்ப்பு சாம்பியன்ஸ்(GARC) விருதை ஆகஸ்ட் 09 அன்று வழங்கி கௌரவித்துள்ளார்.
  • அமெரிக்க வெளியுறவுத்துறையால் வழங்கப்படும் இந்த விருதைப் பெறும் “முதல் நேபாளி” என்ற அந்தஸ்தை இவர் பெற்றுள்ளார். ஏழைகள், வறுமையாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் மனித உரிமைகளுக்காக இரண்டு தசாப்த காலத்துக்கும் மேலாக போராடியதற்காக இந்த விருதானது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பொருளாதார செய்திகள்

RBI இல் “பரிவர்த்தனை உரையாடல் ” தொடங்க  திட்டமிடப்பட்டுள்ளது.

  • மத்திய ரிசர்வ் வங்கியானது UPI இல் “பரிவர்த்தனை உரையாடல்” என்ற புதுமையான கட்டண முன்னெடுப்பு முறையை அறிமுகப்படுத்தும் தீர்மானத்தை ஆகஸ்ட் 2023 இல் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • பாதுகாப்பான சூழலில் முக்கிய கொடுப்பு பரிவர்த்தனைகளைத் தொடங்கவும் அதனை முழுமையாக முடிக்கவும் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அதனை பொது பயனர்கள் செயற்கை நுண்ணறிவு இயங்குதளத்தின் வாயிலாக உரையாடலில் செய்திகளை பெறுவதை நோக்கமாக கொண்டு இந்த அமைப்பானது வடிவமைக்கப்பட்டுள்ளது என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு செய்திகள்

2023 ஆம் ஆண்டிற்கான ஐரோப்பிய தடகள U20 சாம்பியன்ஷிப் போட்டியில் ஃபர்லானி நீளம் தாண்டுதலில் தங்கம் வென்றுள்ளார்.

  • ஜெருசலேம் பகுதியின் கிவாட் ராம் மைதானத்தில் 2023 ஆம் ஆண்டிற்கான ஐரோப்பிய தடகள U20 சாம்பியன்ஷிப் போட்டியில் இத்தாலிய நாட்டு வீரரான மட்டியா ஃபுர்லானி ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் பிரிவில் ஆகஸ்ட் 09 அன்று தங்கம் வென்றுள்ளார்.
  • 18 வயதான இவர் 8.23 மீ பாய்ச்சலை அடைந்ததையடுத்து, கிட்டத்தட்ட ஒரு சென்டிமீட்டர் வித்தியாசத்தில் தனது முன்னுள்ள தனிப்பட்ட சிறந்த பதிவை தவறவிட்டு இந்த பதக்கத்தை தக்க வைத்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இரங்கல் செய்திகள்

புகழ்பெற்ற எழுத்தாளர் ஹரி நார்கே மும்பையில் காலமானார்.

  • மஹராஷ்டிர மாநிலத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரும் சமதா பரிஷத்தின் துணைத் தலைவருமான திரு ஹரி நார்கே(வயது 70) மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பின் காரணமாக ஆகஸ்ட் 09 அன்று காலமானார். 
  • இவர் சாவித்ரிபாய் பூலே புனே பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும், மகாராஷ்டிர மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின்(BC) உறுப்பினராகவும் மாநில மராத்திய மொழியை செம்மொழியாக மாற்றுவதற்கான குழுவின் உறுப்பினராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 
  • “மகாத்மா பூலே-புதிய தேடுதல் வழி” மற்றும் “மகாத்மா பூலே யாஞ்சி பத்னாமி: ஏக் சத்யசோதன்” ஆகியவை இவரின் புகழ்பெற்ற நூல்களாகும்.

DOWNLOAD PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!