10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் முதல் பொதுத்தேர்வு – மாநில முதல்வர் அறிக்கை!!

0
10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் முதல் பொதுத்தேர்வு - மாநில முதல்வர் அறிக்கை!!
10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் முதல் பொதுத்தேர்வு - மாநில முதல்வர் அறிக்கை!!
10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் முதல் பொதுத்தேர்வு – மாநில முதல்வர் அறிக்கை!!

கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் கடந்த மார்ச் முதல் மூடப்பட்டன. இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு எடுக்குமாறு மத்திய அரசு தெரிவித்த நிலையில் பல மாநில அரசுகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் பள்ளிகள் திறப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்நிலையில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் முதல் நடத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்வு அறிவிப்பு:

இந்த கல்வியாண்டு தொடங்கி 6 மாத காலம் முடிவடைந்த நிலையில் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. மாணவர்களின் சுமையை குறைப்பதற்கு மத்திய அரசு பாடத்திட்டத்தில் 30% பாடங்களை குறைத்தது. பள்ளிகள் எப்போது திறக்கலாம் என்பது குறித்து மாநில அரசே முடிவு செய்யலாம் எனத் தெரிவித்தது.

ஜனவரி 2 முதல் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் – அண்ணா பல்கலை அறிவிப்பு!

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் நேரடியாக பிப்ரவரி மாதம் நடத்த வாய்ப்புள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தெரிவித்த நிலையில் மேற்கு வங்காள அரசு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2021 ஜூன் மாதத்தில் நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க இடைநிலை கல்வி வாரியம் மற்றும் மேற்கு வங்க உயர்நிலை கவுன்சில் ஆகியவற்றின் பரிந்துரையின் படி பொதுத் தேர்வுகளை காலதாமதமாக நடத்த முடிவு செய்துள்ளோம் என அந்த மாநில முதல்வர் பார்த்தா சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா பரவல் பொறுத்து தான் அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படும் எனவும் இந்த முடிவு தற்காலிகமானது எனவும் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா நோய் அச்சத்தில் இருந்து படிப்படியாக மீண்டு வரும் நிலையில் மீண்டும் உருமாறிய கொரோனா பரவி வருவதால் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!