தமிழக அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ரூ. 1000 உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் அறிக்கை!

0
தமிழக அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ரூ. 1000 உதவித்தொகை - மாவட்ட ஆட்சியர் அறிக்கை!
தமிழக அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ரூ. 1000 உதவித்தொகை - மாவட்ட ஆட்சியர் அறிக்கை!
தமிழக அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ரூ. 1000 உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் அறிக்கை!

தமிழகத்தில் ஏழை எளிய பெண்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு புதுமைப் பெண் திட்டத்தை அறிவித்து அதன் மூலம் ஏழை எளிய மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கி வருகிறது. அந்த வகையில் நாகை மாவட்டத்தில் 1,024 பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

புதுமைப் பெண் திட்டம்:

தமிழகத்தில் பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு அறிவித்துள்ளது. பெண்களுக்கான இலவச பேருந்து, உள்ளிட்ட பல நலத்திட்டங்கள் வெற்றிகரமாக நடைமுறைக்கு வந்துள்ளது. அந்த வகையில் பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப் பெண் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் படி அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை பயின்று தற்போது கல்லூரி பயின்று வரும் மாணவிகளுக்கு ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த செப். 5 ஆம் தேதி தொடங்கி வைத்தார். அதன் படி நாகை மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் 33 கல்லூரிகளில் படிக்கும் 1024 மாணவிகளுக்கு தலா ரூ. 1000 வழங்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு பயின்று தமிழகத்தில் உயர்கல்வி பயில்பவர்கள், கல்வி பெறும் உரிமையின் கீழ் தனியார் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு பயின்று, 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்றவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் வரவில்லையேனில் இதுதான் நடக்கும் – ஊழியர்கள் கறார்!

மேலும் 2022-23 ஆம் கல்வியாண்டில் மாணவிகள் புதிதாக மேற்படிப்பில் முதலாம் ஆண்டில் சேர்ந்தவர்கள், முதலாம் ஆண்டில் இருந்து இரண்டாம் ஆண்டும், இரண்டாம் ஆண்டில் இருந்து மூன்றாம் ஆண்டுக்கும் செல்லும் இளநிலை பட்டப்படிப்பு மாணவிகள், மூன்றாம் ஆண்டில் இருந்து நான்காம் ஆண்டிற்கு செல்லும் தொழிற்கல்வி மாணவிகள், நான்காம் ஆண்டில் இருந்து ஐந்தாம் ஆண்டிற்கு செல்லும் மாணவிகளும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!