5 ஆண்டுகளில் 100 மருத்துவக் கல்லூரிகள்.. மத்திய அரசு திட்டம் – முழு விவரம் இதோ!

0
5 ஆண்டுகளில் 100 மருத்துவக் கல்லூரிகள்.. மத்திய அரசு திட்டம் - முழு விவரம் இதோ!
5 ஆண்டுகளில் 100 மருத்துவக் கல்லூரிகள்.. மத்திய அரசு திட்டம் - முழு விவரம் இதோ!
5 ஆண்டுகளில் 100 மருத்துவக் கல்லூரிகள்.. மத்திய அரசு திட்டம் – முழு விவரம் இதோ!

2027ம் ஆண்டிற்குள் 100 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவ கல்லூரி:

தற்போது ஆட்சியில் நிறைகள் மற்றும் குறைகள் என பல இருந்து வந்தாலும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு இணைந்து பல்வேறு நலத்திட்டங்களையும் சலுகைகளையும் மக்களுக்கு வழங்கி வருகிறது. சமீபத்தில் மத்திய அரசு நிதியுதவி அளிக்கும் திட்டத்தின் கீழ் 157 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. அவற்றுள் 93 கல்லூரிகள் தொடங்கப்பட்ட நிலையில் மற்ற கல்லூரிகளுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மூன்று கட்டங்களாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

WhatsApp பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வந்துள்ள சூப்பர் அப்டேட் – என்னனு தெரியுமா? விவரம் இதோ!

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களிலும் 100 மருத்துவ கல்லூரிகள் 2027ம் ஆண்டிற்குள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஒரு கல்லூரி கட்ட ரூ.325 கோடி செலவாகும் நிலையில் அதனை மத்திய மற்றும் மாநில அரசு 60 மற்றும் 40 சதவீதம் என்ற அடிப்படையில் வழங்குவதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல் செவிலியர் கல்லூரிகளுக்கென 10 கோடி ஒதுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!