அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – டிசம்பர் 31 கடைசி நாள்!

0
அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - டிசம்பர் 31 கடைசி நாள்!
அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - டிசம்பர் 31 கடைசி நாள்!
அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – டிசம்பர் 31 கடைசி நாள்!

திண்டுக்கல் மாவட்ட அஞ்சல் கோட்டத்தில் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் பணிக்கான ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி முகவர் பணி:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து மீண்டும் மாநிலம் இயல்பு நிலை நோக்கி திருப்பி கொண்டிருக்கும் நிலையில் வேலையிழந்தோர் வேலைவாய்ப்புகளை தேடி வருகின்றனர். கடந்த 2 ஆண்களுக்காக அரசு போட்டித்தேர்வுகள் ஏதும் நடைபெறவில்லை இனி வரும் நாட்களில் TNPSC தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதனால் போட்டித் தேர்வில் பங்கேற்க உள்ளவர்கள் தயாராகி வருகிறார்கள் மறுபுறம் தனியார் துறையும் வேலை வாய்ப்புகளை வழங்க முன்வந்துள்ளனர்.

தமிழகத்தில் 2000+ அரசு ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – முதுகலை பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு!

அதன்படி அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் அரசு வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் சார்பாக தனியார் துறை வேலைவாய்ப்புகள் நடைபெற்று வருகிறது. அதில் 8ம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் முதல் பட்ட மேற்படிப்பு படித்தவர் வரை நேர்காணலில் பங்கேற்று பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் மற்ற துறைகளை தொடர்ந்து அஞ்சல் துறையும் வேலைவாய்ப்புகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது திண்டுக்கல் மாவட்ட அஞ்சலக கோட்டத்தில் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. முகவர் பணிக்கு 10ம் வகுப்பு கல்வி தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – ஆய்வுப்பணியினை விரைந்து முடிக்க அறிவுரை!

மேலும் 18 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். சுயதொழில் செய்பவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் போன்றோர் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் 5000 ரூபாய் மதிப்பிலான என்.எஸ்.சி., பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் உங்கள் பகுதியின் அருகில் உள்ள அஞ்சலகத்தில் தபால் நிலையத்தில் விண்ணப்பத்தை பெற்று அதை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து டிசம்பர் 31ம் தேதிக்குள் திண்டுக்கல் அஞ்சலக கோட்டம் திண்டுக்கல் – 624001 முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here