தமிழகத்தில் அரசு விரைவு பேருந்து கட்டணத்தில் 10% சலுகை – அமைச்சர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் அரசு விரைவு பேருந்து கட்டணத்தில் 10% சலுகை - அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் அரசு விரைவு பேருந்து கட்டணத்தில் 10% சலுகை - அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் அரசு விரைவு பேருந்து கட்டணத்தில் 10% சலுகை – அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் அரசு விரைவு பேருந்துகளில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து சொந்த ஊருக்கு சென்று திரும்பும் பயணிகளுக்கு கட்டணத்தில் 10% தள்ளுபடி வழங்கப்படும் என்று தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து துறை:

தமிழகத்தில் அதிக அளவில் லாபம் ஈட்டி தரக்கூடிய துறைகளில் போக்குவரத்து துறை மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான அளவில் அரசுக்கு லாபம் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் போக்குவரத்து துறையில் மக்களுக்கு வசதியினை அதிகரிக்கும் வகையில் அரசு பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் செய்ய அனுமதி வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து அரசு போக்குவரத்து கழகத்தில் வருவாயை அதிகரிக்கும் வகையில் பல செயல் திட்டங்கள் கொண்டு வர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் தமிழகத்தில் 300 கிலோ மீட்டருக்கு அதிக தொலைவில் உள்ள மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான வசதி கடந்த 2006-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இணையதளம் மற்றும் செல்போன் செயலி மூலம் ஒரு மாதத்துக்கு முன்பே டிக்கெட்டை முன் பதிவு செய்து கொள்ளும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் அரசு விரைவு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்பவர்களுக்கு இணையதளம் மூலம் முன் பதிவு செய்தால் திரும்பி வரும் டிக்கெட் கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் – முதல்வர் இன்று தொடக்கம்!

இது குறித்து அமைச்சர் சிவசங்கர் சட்டசபையில் அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த திட்டமானது அமலுக்கு வர உள்ளது. அதாவது பயணிகள் நீண்ட தூரம் பஸ்களில் பயணம் செய்வதை ஊக்குவிக்கவும், தனியார் ஆம்னி பஸ்கள் மற்றும் ரயில்களில் பயணம் செய்பவர்களை தங்கள் பக்கம் இழுக்கவும், இணையதளம் மூலமாக இருவருக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சலுகை விழா காலங்களில் பொருந்தாது என்றும் இதர நாட்களில் வழக்கம் போல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here