டிசம்பர் மாதத்தில் இன்னும் 10 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
டிசம்பர் மாதத்தில் இன்னும் 10 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
டிசம்பர் மாதத்தில் இன்னும் 10 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
டிசம்பர் மாதத்தில் இன்னும் 10 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய ரிசர்வ் வங்கி தனது வருடாந்திர பட்டியலில் 2021 ஆம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டது. அதில் இந்த டிசம்பர் மாதத்திற்கு 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு பொது விடுமுறை அல்ல மாநில வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள விடுமுறையாகும்.

விடுமுறை நாட்கள்

ஒவ்வொரு ஆண்டும் இந்திய ரிசர்வ் வங்கி தனது வருடாந்திர பட்டியலில் விடுமுறை பட்டியலை பற்றிய அறிவிப்பை வெளியிடும். இதையடுத்து 2021-ஆம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்டது. RBI தனது விடுமுறை பட்டியலை மாநில வாரியாக விடுமுறைகள், மாதத்திற்கான விடுமுறைகள் மற்றும் பண்டிகைக்கான விடுமுறைகள் என மூன்று வெவ்வேறு வகைகளாக பிரித்து அறிவிப்பை வெளியிடும். இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பொது மற்றும் தனியார் துறை வங்கிகளும் டிசம்பர் மாதத்தில் வார விடுமுறைகள் உட்பட 12 நாட்கள் வரை செயல்படாது என்று பட்டியலிட்டுள்ளது

ஜனவரி 5 வரை 144 தடை உத்தரவு – மாநில அரசு அதிரடி உத்தரவு!

இந்த 12 விடுமுறைகள் பொது விடுமுறை அல்ல என்றும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்றவாறு அறிவிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறை ஆகும். ஒவ்வொரு மாநிலத்தில் கொண்டாடப்படும் விழாக்களை கருத்தில் கொண்டு இந்த உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது டிசம்பர் 24-ஆம் தேதி ஐஸ்வால், ஷில்லாங் பகுதிகளில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. அதானல் டிசம்பர் 24-ஆம் தேதி அந்த பகுதிகளில் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டின் மற்ற அனைத்து பகுதிகளில் உள்ள வங்கிகள் செயல்படும்.

100 ஆக உயர்ந்த ஓமைக்ரான் வைரஸ் பாதிப்பு – தொடரும் தீவிர நடவடிக்கை! அச்சத்தில் பொதுமக்கள்!!

இதே போல் ஒவ்வொரு மாநிலத்திற்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வார இறுதி நாட்களில் வழங்கப்படும் விடுமுறை அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். தற்போது இந்த வருடத்திற்கான கிறிஸ்துமஸ் பண்டிகை 4வது சனிக்கிழமை அன்று வருகிறது. அதனால் நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் பொது விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த மாதத்தில் உள்ள வங்கி விடுமுறைகள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • டிசம்பர் 11 – மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை – அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை
  • டிசம்பர் 12 – ஞாயிற்றுக்கிழமை – அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை
  • டிசம்பர் 18 – U SoSo Tham-ன் இறந்த நாள் – ஷில்லாங்கில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை
  • டிசம்பர் 19 – ஞாயிற்றுக்கிழமை – அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை
  • டிசம்பர் 24 – கிறிஸ்துமஸ் விழா – ஐஸ்வால், ஷில்லாங் ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை
  • டிசம்பர் 25 – மாதத்தின் நான்காவது சனிக்கிழமை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை – அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை
  • டிசம்பர் 26 – ஞாயிற்றுக்கிழமை – அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை
  • டிசம்பர் 27 – கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் – ஐஸ்வால் பகுதியில் உள்ள வங்கிளுக்கு மட்டும் விடுமுறை
  • டிசம்பர் 30 – யு கியாங் நங்பா – ஷில்லாங்கில் பகுதியில் உள்ள வங்கிளுக்கு மட்டும் விடுமுறை.
  • டிசம்பர் 31 – புத்தாண்டு ஈவ் – ஐஸ்வால் பகுதியில் பகுதியில் உள்ள வங்கிளுக்கு மட்டும் விடுமுறை

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!