நடப்பு நிகழ்வுகள் – 1 ஆகஸ்ட் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 1 ஆகஸ்ட் 2023
நடப்பு நிகழ்வுகள் - 1 ஆகஸ்ட் 2023
நடப்பு நிகழ்வுகள் – 1 ஆகஸ்ட் 2023

 

தேசிய செய்திகள்

மத்திய அமைச்சர் “ULLAS: Nav Bharat Saksharta Karyakram” இன் கைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

  • மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சரும் கல்வி அமைச்சருமான ஸ்ரீ தர்மேந்திர பிரதான், புதுதில்லியின் பிரகதி மைதானத்தில் உள்ள மாபெரும் பாரத் மண்டபத்தில் “உல்லாஸ்: நவ் பாரத் சக்ஷர்தா காரியக்ரம்” என்பதன் சின்னம் மற்றும் அதன் கைபேசி செயலியை தொடங்கி வைத்துள்ளார்.
  • உல்லாஸ், சமூகத்தில் உள்ள அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் கற்றல் என்ற கருப்பொருளை கொண்ட இந்த முன்முயற்சியானது நாடு முழுவதும் கல்வி பற்றிய விழிப்புணர்வை ஒவ்வொரு தனிநபரையும் சென்றடையும் கற்றல் சூழலை வளர்ப்பதன் மூலம், நாட்டின் திறன் மேம்பாட்டை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டு இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

‘எனது மண், எனது தேசம்’ இயக்கம் தொடங்க திட்டம்.

  • இந்திய நாட்டின் விடுதலைக்காக உயிா்த் தியாகம் செய்த மாபெரும் வீரா்களை போற்றுதல் மற்றும் நினைவுகூரும் வகையில் ‘எனது மண், எனது தேசம்’ என்ற இயக்கமானது தொடங்கப்படும் என ஜூலை 30 இல் நடைபெற்ற ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமா் மோடி அறிவித்துள்ளாா். 
  • சுதந்திரத்தின் மதிப்பை உணர்ந்து அதை பெற்று தந்த அந்த வீரா்களின் நினைவாகவும் அந்த இயக்கத்தின் கீழ் ‘அம்ருத கலசம்’ யாத்திரையானது நடத்தப்படும் என்றும் அதன்படி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 7,500 சிறிய அளவிலான பானைகளில் மண்ணும் கூடவே மரக்கன்றுகளும், செடிகளும் எடுத்து வந்து குறிப்பிட்ட பொது வெளிகளில் நடுவதை நோக்கமாக கொண்டு இந்த முன்னெடுப்பானது வடிவமைக்கப்பட்டுள்ளதாகும். 

மத்திய கல்வி அமைச்சகமானது பல்துறை மேம்பாட்டுக்காக 106 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

  • மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகமானது ஜூலை 30 அன்று தேசிய தலைநகரமான புது டெல்லியில் பல்வேறு மதிப்புமிக்க அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடன் 106 பல்துறை புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.
  • திறந்த பள்ளிப்படிப்புக்கான தேசிய நிறுவனம்(NIOS) இந்திய அசைவு மற்றும் சைகை மொழியை மேம்படுத்துவதற்காக இந்திய சைகை மொழி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்துடன்(ISLRTC) 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் தேசிய உயர்கல்வி துறையில், சர்வதேச தரத்தை புகுத்துவதற்காகவும் இந்திய அறிவு அமைப்பை மேம்படுத்துவதற்காகவும் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பாராளுமன்றத்தில் ஒளிப்பதிவு திருத்த மசோதாவானது நிறைவேற்றப்பட்டுள்ளது.

  • ஒளிப்பதிவு திருத்த மசோதா 2023 ஆனது மக்களவையில் பெரும் அமலுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இதை  நாடாளுமன்றம் முழுமையாக நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவானது ராஜ்யசபாவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • இந்த மசோதாவானது 1952 ஆம் ஆண்டின் ஒளிப்பதிவு சட்டத்தை திருத்துகிறது. மேலும் இதன் கீழ் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியமானது வழங்கிய சான்றிதழானது 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்ற நிலையிலிருந்து தற்போது நிரந்தரமாக செல்லுபடியாகும் என்ற நிலைக்கு மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சர்வதேச செய்திகள்

2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேச கல்வி முறை உச்சி மாநாடானது துபாயில் நடைப்பெறுகிறது.

  • UAE யின் துபாயில் உள்ள ஹம்தான் பின் முகமது ஸ்மார்ட் பல்கலைக்கழக மாபெரும் வளாகத்தில்(HBMSU) 2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேச கல்வி முறை குறித்த உச்சிமாநாட்டை சர்வதேச பொருளாதார மேம்பாட்டு கூட்டமைப்பானது(FEDA) ஜூலை 2023 இல் நடத்தியுள்ளது.
  • FEDA என்பது குறிப்பாக இந்தியாவில் பொருளாதார மேம்பாட்டு வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கிய பொருளாதார அறிஞர்கள் மற்றும் உறுப்பினர் அடங்கிய சர்வதேச அமைப்பாகும். கல்வியில் சிறந்து விளங்கும் லட்சிய மாணவ மற்றும் மாணவிகளுக்கு முக்கியமான மற்றும் பயன்பெறும் வகையிலான ஒரு சிறந்த தளத்தை வழங்குவதை நோக்கமாக கொண்டு இந்த உச்சி மாநாடானது நடைப்பெற்றுள்ளது.

கியால்ஸ்ராஸ் இன் 2 வெண்கலச் சிலைகளானது ரஷ்யாவின் தலைநகரமான மாஸ்கோவில் நிறுவப்பட்டுள்ளன.

  • பத்ம பூஷன் விருது பெற்ற மற்றும் மங்கோலியாவிற்கான முன்னாள் தூதரான கியால்ஸ்ராஸ் பகுலா ரின்போச்சே அவர்களின் இரண்டு வெண்கலச் சிலைகளானது ரஷ்யாவின் தலைநகரமான மாஸ்கோவில் நிறுவப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு துறை அமைச்சகம் ஜூலை 30 அன்று தெரிவித்வத்துள்ளது.
  • இவர் முன்னாள் சோவியத் யூனியன் மற்றும் மங்கோலியாவில் பௌத்த மதத்தை புத்துயிர் பெற மேற்கொண்ட முயற்சிகளை போற்றும் விதமாக இந்த சிலைகள் அமைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாஸ்கோவில் உள்ள புத்த கோவிலுக்குள் ஒரு 6 அடி உயர சிலையும் மைய நகரப் பூங்காவில் மற்றொரு 9 அடி சிலையும் இவர் நின்ற நிலையில் இருப்பது போன்று நிறுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மாநில செய்திகள்

சமீபத்தில் அசாம் மாநிலத்தின் புதிய சட்டப் பேரவை கட்டிடத்தை மக்களவை சபாநாயகர் திறந்து வைத்துள்ளார்.

  • நாட்டின் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஜூலை 30 அன்று அசாம் மாநிலத்தின் தலைநகரான கவுகாத்தியில் அம்மாநிலத்தின் புதிய “சட்டமன்ற கட்டிட வளாகத்தை” திறந்து வைத்துள்ளார்.
  • அசாம் மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை இந்த வளாகமானது பிரதிபலிக்கிறது என்றும் மக்களுக்கான சமத்துவம், நீதி மற்றும் மக்களின் அரசியலமைப்பு உரிமைகளுக்காக உழைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட “மக்கள் பிரதிநிதிகள்” சட்டமன்ற சபைக்குள் அதிக நேரம் செலவிட வேண்டும் என்றும் அம்மாநில முதல்வர்  திரு. சர்மா திறப்பு விழா நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளார்.

திங்க் 20 உச்சி(ஜி 20) மாநாடானது இன்று கர்நாடகாவின் மைசூருவில் தொடங்கியுள்ளது.

  • G20 மேம்பாடு தொடர்பான கொள்கைப் பிரச்சினைகளைப் பற்றி உயர்மட்ட வல்லுநர்கள் மற்றும் சிந்தனைக் குழுக்கள் விவாதிக்க திங்க்20 உச்சி மாநாடானது G20 இந்தியாவின் தலைமையின் கீழ் ஜூலை 31 அன்று கர்நாடகாவின் மைசூரில் நடைபெற உள்ளது.
  • நிலையான வளர்ச்சிக்கான வாழ்க்கை முறை, பெண்கள் தலைமையிலான மேம்பாடு, மேக்ரோ பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், டிஜிட்டல் மாற்றம்,  உலகளாவிய நிதி ஒழுங்கை துரிதப்படுத்துதல், பசுமை மாற்றம் போன்ற உலகின் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதை நோக்கமாக கொண்டு இந்த மூன்று நாள் மாநாடானது நடைபெற உள்ளது.

நியமனங்கள்

இந்திய வம்சாவளியை சேர்ந்த கொள்கை நிபுணர் நிஷா பிஸ்வால் துணை தலைமை செயல் அதிகாரியாக அமெரிக்க நிதி நிறுவனத்திற்கு ஜூலை 2023 இல் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • இந்திய வம்சாவளியை சேர்ந்த பொருளாதார கொள்கை நிபுணரான நிஷா பிஸ்வால், அமெரிக்க நிதி நிறுவனத்தின் துணை தலைமை நிர்வாக அதிகாரியாக (DY-CEO)நியமிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க செனட் சபையானது ஜூலை 2023 இல் அறிவித்துள்ளது.
  • அமெரிக்க வெள்ளை மாளிகை மற்றும் வெளியுறவுக் கொள்கையின் சர்வதேச மேம்பாட்டுத் திட்டங்களில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள இவர் அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி நிதியக நிறுவனத்தின் துணை தலைமை நிர்வாக அதிகாரியாக தனது சிறப்பான பணியை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

7 சிங்கப்பூர் செயற்கைக்கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின்(ISRO) PSLV-C56 ராக்கெட் ஆனது சிங்கப்பூரின் DS-SAR செயற்கைக்கோள் உட்பட ஆறு இணை பயணிகள் பேலோடுகளை உள்ளடக்கிய தொகுப்பினை ISRO வின் ஏவுதளமான ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஜூலை 30 அன்று காலை 06:30 மணி அளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
  • இது கோர் தனியான அமைப்பில் பிஎஸ்எல்வியின் 17வது மற்றும்  பிஎஸ்எல்வியின் 58வது விமானம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். PSLV-C56 / DS-SAR என்பது சிங்கப்பூரின் ST இன்ஜினியரிங் நிறுவனத்திற்கான “நியூஸ்பேஸ் இந்தியா அமைப்பின்(NSIL) பிரத்யேக மற்றும் முதன்மை வணிகப் பணியாகும்”. DS-SAR என்பது ராடார் இமேஜிங் புவி கண்காணிப்பு சிறப்பு பணி செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

GalaxEye நிறுவனமானது உலகின் முதல் பல்துறை உணர்விகளை உள்ளடக்கிய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.

  • சென்னையை மையமாக கொண்ட விண்வெளி GalaxEye  நிறுவனமானது உலகின் முதல்  பல்துறை உணர்விகளை உள்ளடக்கிய செயற்கைக்கோள் அமைப்பை அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக தனது சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
  • இந்த புதிய வகை செயற்கைக்கோள் அமைப்பானது செயற்கை துளை ரேடாரிலிருந்தும்(SAR) ஆப்டிகல் உணர்விகளிலிருந்தும் தரவுகளை பகுப்பாய்வு செய்து பயன்பாட்டை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த அமைப்பானது வடிவமைக்கப்பட்டுள்ளது. 

விளையாட்டு செய்திகள்

2023 ஆம் ஆண்டிற்கான அட்லாண்டா ஓபன் தொடரில் டெய்லர் ஃபிரிட்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.

  • அமெரிக்காவை சேர்ந்த டெய்லர் ஃபிரிட்ஸ், ஜூலை 30 அன்று அட்லாண்டா ஓபனை, முதல் நிலை வீரரான ஆஸ்திரேலிய வீரர் அலெக்சாண்டர் வுகிச்சை தோற்கடித்து இந்த தொடரின் இரண்டாவது டூர்-லெவல் பட்டத்தையும் ஒட்டுமொத்தமாக ஆறாவது இடத்தையும் பெற்றுள்ளார்.
  • இவர் இந்த சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டியில் அலெக்சாண்டர் வுகிச்சை 7-5, 6-7(5), 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து, சாம்பியன்ஷிப் பட்டத்தினை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

2023 ஆம் ஆண்டிற்கான உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் இந்தியா 4 தங்கங்களை வென்றுள்ளது.

  • சீனாவின் செங்டு மாநகரில் ஜூலை 31 அன்று நடைபெற்ற உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டி தொடரில் இந்திய அணியானது கிட்டத்தட்ட நான்கு தங்கம் உட்பட மொத்தமாக 6 பதக்கங்களை வென்று அந்த நாளின் போட்டியை நிறைவு செய்தது.
  • இந்த தொடரில் 10 மீட்டர் ஏர் ரைபிள் ஆண்களுக்கான தனிநபர் பிரிவில் ஐஸ்வரே தங்கம் வென்றுள்ளார். மேலும் துப்பாக்கி சுடும் வீரர்களான திவ்யான்ஷ் சிங் பன்வார், ஐஸ்வரே பிரதாப் சிங் தோமர் மற்றும் அர்ஜுன் பாபுதா ஆகியோர் இணைந்து 10 மீட்டர் ஏர் ரைபிள் ஆடவர் அணி கலப்பு பிரிவில் தங்கம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

2023 ஆம் ஆண்டிற்கான டேபிள் டென்னிஸ் போட்டி தொடரில் கோவா சேலஞ்சர்ஸ் அணியானது தொடரின் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

  • ஜூலை 30 அன்று மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள பலேவாடி விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டிற்கான அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் கோவா சேலஞ்சர்ஸ் அணியானது சென்னை லயன்ஸ் அணியினை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளது.
  • இந்த இறுதி போட்டியில் கோவா அணியானது 8-7 என்ற புள்ளிகள் கணக்கில் கடந்த ஆண்டின் சாம்பியனான சென்னை அணியை வீழ்த்தியுள்ளது. மேலும் இது கோவா சேலஞ்சர்ஸின் முதல் “அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (UTT)” தொடரின் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கை தடகள தேசிய சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியானது இதுவரை 9 தங்கம் உட்பட மொத்தமாக 14 பதக்கங்களை வென்றுள்ளது.

  • இலங்கையின் கொழும்பு சுகததாச மைதானத்தில் நடைபெறும் தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் இந்திய அணியானது ஜூலை 30 அன்று மொத்தமாக 14 பதக்கங்களுடன் ஆட்டத்தை நிறைவு செய்துள்ளது.
  • இதில் ஒரு வெண்கலம், 4 வெள்ளி, 9 தங்கம் என 14 பதக்கங்கள் அடங்கும். மேலும் ஜூலை 28 அன்று தொடரில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரரான கிஷோர் குமார் ஜெனாவுக்கு ஆண்கள் பிரிவில் “சிறந்த ஈட்டி எறிபவர்” என்ற சிறப்பு கோப்பையானது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய தினம்

உலகளாவிய வலை தினம் 2023

  • WWW இணையத்தை உருவாக்கிய டிம் பெர்னர்ஸ்-லீயின் நினைவாகவும், இணையதளத்தை பயன்படுத்தி உலக மக்கள் சுதந்திரமாக தகவல்களை தேடுவதற்கான திறனை மதித்தல் மற்றும் கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 ஆம் நாளானது உலகளாவிய வலை தினமாக கொண்டாடப்படுகிறது.
  • இந்த தினத்திற்கென்று எந்த ஒரு கருப்பொருளும் இல்லை. மேலும் உலகில் உள்ள மக்கள் இணையத்தளத்தை நன்முறையில் மற்றும் பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதை பொது நோக்கமாக கொண்டு கொண்டாடப்படுகிறது.

உலக தாய்ப்பால் வாரம் 2023

  • குழந்தைகளின் ஆரோக்கியம், சுகாதாரம் மற்றும் நலன், நல்ல ஊட்டச்சத்து, தாய்வழி ஆரோக்கியத்தின் நன்மைகள் மற்றும் அதன் மேம்பாடு ஆகியவற்றை உலக தாய்மார்களிடையே முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரமானது(ஆகஸ்ட் 01 – 07 வரை) உலக தாய்ப்பால் வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
  • இது 1990 இன்னோசென்டி அமைப்பின் பிரகடனத்தின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. மேலும் உலக தாய்ப்பால் வாரமானது(WBW) 1992 இல் தொடங்கப்பட்டதாகும். “தாய்ப்பால் மற்றும் வேலை” என்பது இந்த ஆண்டிற்கான கருப்பொருளாகும்.

DOWNLOAD PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!