TMB தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வேலைவாய்ப்பு 2024 – நேர்காணல் மட்டுமே….!

0
TMB தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வேலைவாய்ப்பு 2024 - நேர்காணல் மட்டுமே....!

பழைய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி லிமிடெட் ஆனது Deputy General Manager மற்றும் Assistant General Manager பதவிக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. வங்கி துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் இந்த அறிய வாய்ப்பை தவற விடாமல் உடனே ஆன்லைன் மூலம் இப்பணிக்கு மே 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி
பணியின் பெயர் Deputy General Manager & Assistant General Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.05.2024
விண்ணப்பிக்கும் முறை Online

TMB வங்கி காலிப்பணியிடங்கள்:

Deputy General Manager மற்றும் Assistant General Manager பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

GM கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Graduate in any discipline and Chartered Accountant தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 22) மழை பெய்யும் – வானிலை மையம் அலர்ட்!

வயது வரம்பு:

31.03.2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் குறைந்தபட்சம் 40 முதல் அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல் முறை:

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்கள் நேரடி / வீடியோ கான்பரன்சிங் மூலம் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலின் முறை, தேதி மற்றும் நேரம் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் மூலம் 05.05.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!