ஜீ தமிழ் “என்றென்றும் புன்னகை” சீரியலில் இருந்து விலகிய நடிகர் – ரசிகர்கள் அதிர்ச்சி!

0
ஜீ தமிழ்
ஜீ தமிழ் "என்றென்றும் புன்னகை" சீரியலில் இருந்து விலகிய நடிகர் - ரசிகர்கள் அதிர்ச்சி!
ஜீ தமிழ் “என்றென்றும் புன்னகை” சீரியலில் இருந்து விலகிய நடிகர் – ரசிகர்கள் அதிர்ச்சி!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் “என்றென்றும் புன்னகை” சீரியலில் இருந்து புதிதாக திருமணம் முடிந்துள்ள ஹீரோ தீபக் விலக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்,

நடிகர் தீபக் விலகல்:

சின்னத்திரையில் காலை முதல் இரவு வரை பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒரு சில சீரியல்கள் மட்டுமே டாப் வரிசையில் இடம் பிடிக்கிறது. இந்நிலையில் சீரியலில் இருந்து முக்கிய கதாபாத்திரங்கள் விலகும் செய்தி தினசரி வந்து கொண்டே இருக்கிறது. அதன் படி தற்போது ஜீ தமிழில் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சீரியல் தான் “என்றென்றும் புன்னகை”. இந்த சீரியலில் கதாநாயகனாக சித்து கதாபாத்திரத்தில் நடிகர் தீபக் நடித்து வருகிறார்.

TN Job “FB  Group” Join Now

அவருக்கு சமீபத்தில் தன்னுடைய உடன் நடித்த நடிகை அபிநவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின் அவர் தொடர்ந்து அந்த சீரியலில் நடித்து வந்த நிலையில் தற்போது சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு பதிலாக சித்துவாக வேறொரு நடிகர் களமிறங்க இருக்கிறார். இது குறித்து அவர் தனது பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் என்றென்றும் புன்னகை சீரியலில் இருந்து சில காரணங்களால் அதிகாரப்பூர்வமாக விலகுகிறேன்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.5000 – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

அந்த சீரியலில் ஒரு அங்கமாக இருந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் கொடுத்த அன்பிற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி. இதே அன்பையும், ஆதரவையும் புதிய சித்துவிற்கும் வழங்குவீர்கள் என நம்புகிறேன். புதிய ப்ராஜெக்ட்டில் விரைவில் சந்திக்கிறேன் என குறிப்பிட்டு இருக்கிறார். அதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றன. திருமணம் முடிந்த கையோடு அவர் சீரியலில் இருந்து விலகியதால் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here