உங்கள் இன்சூரன்ஸ் பாலிசி, பான் கார்டு தொலைந்து விட்டதா? பெற்றுக்கொள்ள எளிய வழிமுறை இதோ!!

0
உங்கள் இன்சூரன்ஸ் பாலிசி, பான் கார்டு தொலைந்து விட்டதா? பெற்றுக்கொள்ள எளிய வழிமுறை இதோ!!
உங்கள் இன்சூரன்ஸ் பாலிசி, பான் கார்டு தொலைந்து விட்டதா? பெற்றுக்கொள்ள எளிய வழிமுறை இதோ!!
உங்கள் இன்சூரன்ஸ் பாலிசி, பான் கார்டு தொலைந்து விட்டதா? பெற்றுக்கொள்ள எளிய வழிமுறை இதோ!!

முக்கிய ஆவணமாக கருதப்படும் இன்சூரன்ஸ் பாலிசி மற்றும் பான் கார்டு உள்ளிட்டவை தொலைந்து விட்டால், சில ஆவணங்களை செலுத்தி ஆவற்றின் நகலை எப்படி பெற்றுக்கொள்வது எனும் வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

பான் கார்டு திரும்ப பெறுதல்

அரசின் அத்தியாவசிய தேவைகளுக்கு ஆதார் மற்றும் பான் கார்டு ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஏதாவது ஒன்று தொலைந்து விட்டால் கூட அரசு மற்றும் தனியார் சேவைகளை பெற்று கொள்வதில் சிக்கல்கள் ஏற்படலாம். அதே போல தான் இன்சூரன்ஸ் பாலிசிகளும். பணம் இருக்கும் நேரத்தில் அவற்றை இன்சூரன்ஸ் போன்றவற்றில் முதலீடு செய்து வைத்தால், அவசர நேரத்தில் அந்த பணம் உங்களுக்கு பயன்படும். அந்த வகையில் உங்கள் இன்சூரன்ஸ் பாலிசி, பான் கார்டு உள்ளிட்டவை தொலைந்து விட்டால் அவற்றின் நகலை பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ssc

  • முதலில் நீங்கள் பாலிசி பெற்ற கிளையை அணுக வேண்டும்.
  • உங்கள் முகவரி சான்று, புகைப்பட அடையாள சான்றின் நகல்கள், நோட்டரி பப்ளிக் சான்றிதழ், பிரீமியம் செலுத்தியதற்கான ரசீதின் நகலை இணைக்க வேண்டும்.
  • இதற்காக 75 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
  • மேலும் கவரேஜ் தொகையாக 1000 ரூபாய்க்கு 20 பைசா வீதம் கட்டணம் செலுத்த வேண்டும்.
  • இதற்கு விண்ணப்பித்த 15 நாட்களுக்குள்ளாக உங்கள் நகல் ஆவணம் கிடைத்து விடும்.
  • இப்போது நகல் பாலிசி கோர விண்ணப்பம் கொடுத்தால், இரண்டு ஆவணங்கள் கிடைக்கும்.
  • அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பாத்திரத்தில் டைப் செய்து கொள்ள வேண்டும்.
    மற்ற ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்களை பூர்த்தி செய்து
  • நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

பான் கார்டு தொலைந்தால்,

  • இதற்கு பான் கார்டுகளை பெற்று தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்டுகளை அணுகலாம்.
  • அல்லது வருமானவரித்துறையினரை அணுகலாம்.
    பிறகு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2, அடையாள சான்று, முகவரி சான்று ஆகியவற்றின் நகலை கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.
  • இதற்காக 96 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
  • பிறகு பான் கார்டு கரெக்சன் விண்ணப்பம் வாங்கி, தேவையான விவரங்களை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.
  • அதன் பின் 45 நாட்களுக்குள்ளாக பான் கார்டு உங்களுக்கு கிடைத்து விடும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!