YES வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – FD வட்டி விகிதம் திருத்தம்!

0
YES வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - FD வட்டி விகிதம் திருத்தம்!
YES வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - FD வட்டி விகிதம் திருத்தம்!
YES வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – FD வட்டி விகிதம் திருத்தம்!

YES வங்கி நிலையான வைப்பு அதாவது FD வட்டி விகிதங்களை திருத்தி அமைத்துள்ளது. ஜூன் 3 முதல் அமலில் இருக்கும் YES வங்கியின் புதிய வட்டி விகிதங்கள் ஏழு நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை இருக்கும். அதற்கான முழு விபரங்கள் இப்பதிவில் வழங்கப்பட்டு உள்ளது.

FD வட்டி விகிதம்:

YES வங்கி அதன் கால வைப்புத்தொகையின் வட்டி விகிதங்களை திருத்துவதோடு, வழக்கமான மற்றும் மூத்த குடிமக்களுக்கும் நிலையான வைப்பு விருப்பங்களையும் வழங்கி உள்ளது. ஜூன் 3 முதல் நடைமுறைக்கு வரும் புதிய வட்டி விகிதங்கள் ஏழு நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை இருக்கும். சமீபத்திய அறிவிப்பின் படி, 7 முதல் 14 நாட்களில் முதிர்ச்சியடையும் வைப்புத்தொகைக்கு 3.25 %, 15 முதல் 45 நாட்களில் முதிர்ச்சியடைந்த எஃப்.டி.க்களுக்கு 3.50%, மேலும் 46 முதல் 90 நாட்களில் முதிர்ச்சியடைந்த வைப்புத்தொகைக்கு 4.00 சதவீதத்தை வழங்குகிறது

ஆதார் கார்டில் முகவரியை ஆன்லைனில் மாற்றும் எளிய வழிமுறைகள் இதோ!

3 மாதம் முதல் 6 மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கு முதிர்ச்சியடையும் கால வைப்புத்தொகையைப் பொறுத்தவரை, வங்கி 4.5 சதவீதத்தை வழங்கும். 6 மாதங்களில் அல்லது 9 மாதங்களுக்கும் குறைவாக முதிர்ச்சியடைந்த எஃப்.டி.க்கள் 5.00 சதவீதத்தைப் பெறும். முதிர்வு காலம் 9 மாதங்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான கால வைப்புத்தொகைகளுக்கு YES வங்கி 5.25 சதவீத வட்டி விகிதத்தை வழங்கும்.

TN Job “FB  Group” Join Now

வழக்கமான மற்றும் மூத்த குடிமக்களுக்கும் 1 முதல் 10 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் வைப்புத்தொகைக்கு வங்கி மேலும் சிறப்பு வட்டி விகிதத்தை வழங்கும். 1 ஆண்டு முதல் 3 வருடங்களுக்கும் குறைவான முதிர்வு கொண்ட எஃப்.டி.க்கள் 6 சதவீத வட்டி விகிதத்தை வழங்கும். 5 முதல் 10 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் வைப்புத்தொகைக்கு வட்டி விகிதம் 6.50 சதவீதம் வரை உயரும், அதே நேரத்தில் 3 ஆண்டுகளில் 5 ஆண்டுகளில் குறைவான முதிர்ச்சியடையும் கால வைப்பு 6.25 சதவீதத்தை வழங்கும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!