உலகின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோ – ஜீ தமிழில் ‘சர்வைவர்’ செப்.12 முதல் ஒளிபரப்பு!

0
உலகின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோ - ஜீ தமிழில் 'சர்வைவர்' செப்.12 முதல் ஒளிபரப்பு!
உலகின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோ - ஜீ தமிழில் 'சர்வைவர்' செப்.12 முதல் ஒளிபரப்பு!
உலகின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோ – ஜீ தமிழில் ‘சர்வைவர்’ செப்.12 முதல் ஒளிபரப்பு!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் உலகின் மிகப்பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘சர்வைவர்’ ஒளிபரப்பாகவுள்ளது. இதற்கான ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர்.

சர்வைவர் நிகழ்ச்சி:

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், தென்னிந்திய பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் உலகின் மிகப்பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘சர்வைவர்’ ஒளிபரப்பாகவுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி போல இல்லாமல் ஆப்பிரிக்க கடற்கரை பகுதியில் உள்ள எழில்மிகு சான்சிபார் தீவுகளில், போட்டியாளர்கள் எப்படி இயற்கையின் ஆற்றலை எதிர்கொண்டு 90 நாட்கள் தாக்குப்பிடித்து வாழப்போகிறார்கள் என்பதையே இந்நிகழ்ச்சியின் கன்டென்ட் ஆக உள்ளது.

“பாண்டியன் ஸ்டார்ஸ்” ஜீவா, மீனா ஜோடி வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் வாழ்த்து!

இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். அதனை தொடர்ந்து, ஆகஸ்ட் 22-ம் தேதியன்று உறுதி செய்யப்பட்ட போட்டியாளர்கள் பற்றிய விவரங்களுடன் கூடிய ஒரு டிரைலரை நடிகர் ஆர்யா வெளியிட்டார். வெளிநாட்டில் மனித நடமாட்டம் இல்லாத தீவில் தமிழ் பிரபலங்கள் 90 நாட்கள் எப்படி இருக்க போகிறார்கள் எனவும், இந்த சர்வைவர் நிகழ்ச்சியின் பிரம்மாண்டம், ரசிகர்களின் பார்வைக்கு விருந்தாக இந்த வரும் செப்டம்பர் 12 முதல் தினமும் இரவு 9:30 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகர்கள் நந்தா மற்றும் விக்ராந்த், சென்னை 28 திரைப்படம் மூலமாக பிரபலமடைந்த நடிகையும், தொலைக்காட்சி பிரபலமுமான விஜயலக்ஷ்மி, தமிழ் மற்றும் பல்வேறு மொழிகளில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றிய நடிகர் பெசன்ட் ரவி, பிரபல மாடல் மற்றும் நடிகை காயத்ரி ரெட்டி, நடிகை ஸ்ருஷ்டி டாங்கே, நகைச்சுவை நடிகர் தம்பி ராமையாவின் மகனும் – வளர்ந்து வரும் தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமான உமாபதி ராமையா, விஜே பார்வதி ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டு உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக நடிகர் அர்ஜுன் பங்கேற்க உள்ளார். இதனால் ரசிகர்களிடம் ஆர்வம் அதிகரித்து உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!