பிரபல நிறுவனங்களில் முடிவுக்கு வரும் வீட்டில் இருந்தே வேலை (WFH) – அலுவலகத்திற்கு செல்ல தயாரா?

1
பிரபல நிறுவனங்களில் முடிவுக்கு வரும் வீட்டில் இருந்தே வேலை (WFH) - அலுவலகத்திற்கு செல்ல தயாரா?
பிரபல நிறுவனங்களில் முடிவுக்கு வரும் வீட்டில் இருந்தே வேலை (WFH) - அலுவலகத்திற்கு செல்ல தயாரா?
பிரபல நிறுவனங்களில் முடிவுக்கு வரும் வீட்டில் இருந்தே வேலை (WFH) – அலுவலகத்திற்கு செல்ல தயாரா?

உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் ஊழியர்களை அலுவலகங்களுக்கு திரும்ப அழைக்க நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

வீட்டில் இருந்தே வேலை:

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் பலர் தங்களது வேலைகளை இழந்து பெரும் துயர் அடைந்தது குறிப்பிடத்தக்கது. சில முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்தியது. அதனை தொடர்ந்து Work from Home முறையில் பலர் பணியாற்றி வந்தனர். தற்போது உலகம் முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வருகிறது.

ராமநாதபுரம்‌, சிவகங்கை உட்பட 19 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை – வானிலை அறிக்கை!

கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் பணியில் தடுப்பூசி முக்கிய பங்காற்றி வருகிறது. தற்போது தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் விகிதம் அதிகரித்த நிலையில் நிறுவனங்களுக்கு பணியாளர்களை வர அனுமதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நெஸ்லே இந்தியா, டாடா நுகர்வோர் தயாரிப்பு, ஆம்வே, டாபர், கோத்ரேஜ் போன்ற சில முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சில நாட்கள் வீட்டில் இருந்து வேலை, சில நாட்கள் அலுவலகத்தில் இருந்து வேலை என்ற அடிப்படையில் பணியாற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கோடக் மகேந்திரா வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, யெஸ் வங்கி, டெலாய்ட் ஆகியவை அடுத்த இரண்டு மாதங்களில் 90 சதவிகித பணியாளர்களுடன் அலுவலகத்தில் வந்து பணிகளை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது. எங்கள் அலுவலகங்கள் அனைத்தும் அந்தந்த மாநில அரசுகளால் வழங்கப்பட்ட உத்தரவுகளுக்கு ஏற்ப 100 சதவீத மனிதவளத்தில் வேலை செய்கின்றன.

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு அரை நேரம் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

தாய்மார்கள், ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெண் ஊழியர்கள், 65 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள், நோயுற்றவர்கள், கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் ஊழியர்கள் ஆகியோர் வீட்டிலிருந்து தொடர்ந்து வேலை செய்ய அனுமதிக்கிறோம். மற்றவர்கள் அலுவலகம் வந்து பணியாற்ற ஊக்குவிக்கிறோம் என ஹெச்டிஎப்சி வங்கியின் நிர்வாக இயக்குனர் ரேணு சுட் கர்னாட் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் அலுவலகம் வந்து பணி செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!