நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் அதிகரிக்கும் மரணங்கள் – WHO தகவல்!!

0
நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் அதிகரிக்கும் மரணங்கள் - WHO தகவல்!!
நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் அதிகரிக்கும் மரணங்கள் - WHO தகவல்!!
நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் அதிகரிக்கும் மரணங்கள் – WHO தகவல்!!

அலுவலகங்களில் நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் ஏற்படும் உடல்நல குறைபாடுகள், மரணங்கள் குறித்து உலக சுகாதார அமைப்பு ஒரு ஆய்வு மேற்கொண்டுள்ளது. இதில் அதிகநேரம் வேலை பார்ப்பவர்களுக்கு அதிகளவு மரணம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி முடிவுகள் வெளியாகியுள்ளது.

அதிகரிக்கும் மரணம்:

நீண்ட நேரம் வேலை பார்ப்பவர்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மனநலம் குறித்த சர்வதேச ஆய்வு ஒன்று உலக சுகாதார அமைப்பால் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் 2016 ஆம் ஆண்டு வரை, அதிக நேரம் வேலை பார்த்த 745,000 பேர் பக்கவாதம் மற்றும் இதய நோயால் மரணமடைந்திருப்பதாக கண்டறியப்பட்டு, இந்த தகவல்கள் சர்வதேச சுற்றுச்சூழல் ஆய்விதழில் வெளியிடப்பட்டது. இந்த உயிரிழப்பு 2000 ஆம் ஆண்டில் ஏற்பட்ட உயிரிழப்பை விட 30 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

உதாரணமாக ஒருவர் ஒரு வாரத்துக்கு 55 மணி நேரம் அல்லது அதற்கு மேல் வேலை செய்தால் அது பெரிய ஆபத்து என உலக சுகாதார அமைப்பின் சுற்றுச்சூழல் பருவநிலை மாற்றம் மற்றும் சுகாதாரத்துறை இயக்குநர் மரிய நீரா தெரிவித்துள்ளார். மேலும் இதனால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமாக 72% ஆண்கள் என்றும் அவர்களில் நடுத்தர வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் என்றும் ஆய்வு முடிவு கூறுகிறது. இத்தகைய மரணங்களை சந்தித்தவர்கள் வேலையில் இருந்தபோது விட, வேலையே விட்டு விலகிய பல ஆண்டுகளுக்கு பிறகே ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் – முதல்வர் ஆலோசனை!!

இது குறித்து உலக சுகாதர அமைப்பு தெரிவிக்கையில், தென்கிழக்கு ஆசியா, மேற்கு பசிபிக் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ளவர்கள் தான் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 194 நாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் படி, ஒரு வாரத்தில் 55 மணிநேரம் அல்லது அதற்கு மேலாக வேலை பார்ப்பது 35 சதவீதம் பக்கவாதத்தை ஏற்படுத்தும் எனவும், 35 மணி நேரம் முதல் 40 மணி நேரம் வேலை செய்வது 17 சதவீதம் உயிரிழப்பு மற்றும் இதய நோய் ஏற்பட காரணமாக அமையும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!