எந்தெந்த வங்கிகள் 3 மாத EMI தொகையை தள்ளிவைத்து இருக்கின்றன..? முழு விபரங்கள் இதோ..!

0
எந்தெந்த வங்கிகள் 3 மாத EMI தொகையை தள்ளிவைத்து இருக்கின்றன
எந்தெந்த வங்கிகள் 3 மாத EMI தொகையை தள்ளிவைத்து இருக்கின்றன

எந்தெந்த வங்கிகள் 3 மாத EMI தொகையை தள்ளிவைத்து இருக்கின்றன..? முழு விபரங்கள் இதோ..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இதனால் வருமானம் இன்றி தவிப்பதால் ரிசர்வ் வங்கி நிதி நிறுவனங்கள் மற்றும் பிற வங்கிகள் 3 மாத EMI தொகை வசூலிப்பதை தள்ளிவைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

வங்கிகளின் விபரங்கள்:

ரிசர்வ் வங்கியை உத்தரவை முதன் முதலில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அமல்படுத்தியது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு வங்கியாக இந்த உத்தரவை வெளியிட்டு வருகின்றன. அவற்றின் விபரங்கள்:

சிபிஎஸ்இ 1 – 8 ஆம் வகுப்பு வரை தேர்வின்றி தேர்ச்சி !!!

1. பஞ்சாப் நேஷனல் வங்கி:

மார்ச் 01, 2020 முதல் மே 31, 2020 வரையான அனைத்து டேர்ம் லோன் தவணைகள் மற்றும் கேஷ் க்ரெடிட் வட்டிகளை தள்ளி வைத்திருப்பதாக, தங்கள் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் PNB தெரிவித்து உள்ளது.

2. ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ்:

ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், மார்ச் 01, 2020 முதல் மே 31, 2020 வரையான அனைத்து டேர்ம் கடன்கள் & வொர்க்கிங் கேப்பிட்டல் கடன் தவணைகள் மற்றும் வட்டிகள் ஒத்தி வைக்கப்படுவதாக தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளது.

அசல் மற்றும் அல்லது வட்டி, புல்லட் ரீபேமெண்ட்கள், இ எம் ஐ மற்றும் க்ரெடிட் கார்ட் பாக்கித்தொகை (01-03-2020 – 31-05-2020) எல்லாம் ஒத்தி வைக்கப்பபடுவதாக சென்ட்ரல் வங்கி தெரிவித்து உள்ளது.

3. கனரா வங்கி:

கடன் வாங்கி இருப்பவர்கள், 01-03-2020 முதல் 31-05-2020 வரையான காலத்துக்கு டேர்ம் லோன் இஎம்ஐ (EMI) மற்றும் தவணைகளை ஒத்திப் போட தகுதி உள்ளவர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக கனரா வங்கி தெரிவித்து உள்ளது.

4. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா:

பேங்க் ஆஃப் பரோடா, கடந்த 01.03.2020 முதல் 31.05.2020 வரையான அனைத்து கடன் தவணைகளும் 3 மாதங்களுக்கு ஒத்தி வைக்கிறது. இது அனைத்து ரக டேர்ம் கடன்கள் (கார்ப்பரேட், எம் எஸ் எம் இ, விவசாயம், சில்லறைக் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், தனி நபர் கடன்) எல்லாவற்றுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

5. பேங்க் ஆப் பரோடா:

செமஸ்டர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் !!!!

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!