WhatsApp சேனல்களில் எமோஜி & வாய்ஸ் நோட்களை அனுப்பலாம் – வெளியான புதிய அப்டேட்!
வாட்ஸ்அப் சேனல்களில் அவதாரம் வடிவிலான எமோஜிகள், மற்றும் வாய்ஸ் நோட்டுகளை அனுப்பும்படியான புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
WhatsApp:
WhatsApp நிறுவனம் பயனர்களின் அனுபவத்தை மேலும் சிறப்பாகும் வகையில் ஏகப்பட்ட அப்டேட்களை வெளியிட்டபடி இருந்து வருகிறது. அந்த வகையில், ஒரே WhatsApp செயலியில் இரண்டு அக்கவுண்டுகளை லாகின் செய்யும்படியான அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக, புகைப்படத்தினை ஒரு முறை மட்டுமே பார்க்கும் படியான வசதியைப் போல வாய்ஸ் மெசேஜ்களையும் ஒருமுறை மட்டுமே கேட்கும்படியான வசதியும் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கு இது கட்டாயம் – நவ.15 விண்ணப்பிக்க கடைசி நாள்!
இதனைத் தொடர்ந்து சேனல் தொடர்பாக WhatsApp நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, வாட்ஸ்அப் மூலமாக நீங்கள் பின் தொடரும் சேனல்களில் அவதாரம் வடிவிலான எமோஜிகள், மற்றும் வாய்ஸ் நோட்டுகளை அனுப்பலாம் என WhatsApp நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போதைக்கு இந்த அப்டேட் WhatsApp டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.