உங்களது பணத்தை தவறாக வேறொருவருக்கு அனுப்பி விட்டால் என்ன செய்வது? RBI விதிமுறைகள்!

0
உங்களது பணத்தை தவறாக வேறொருவருக்கு அனுப்பி விட்டால் என்ன செய்வது? RBI விதிமுறைகள்!
உங்களது பணத்தை தவறாக வேறொருவருக்கு அனுப்பி விட்டால் என்ன செய்வது? RBI விதிமுறைகள்!
உங்களது பணத்தை தவறாக வேறொருவருக்கு அனுப்பி விட்டால் என்ன செய்வது? RBI விதிமுறைகள்!

தவறுதலாக நாம் அனுப்ப வேண்டிய கணக்கை தவிர்த்து மற்ற வங்கி கணக்கிற்கு நமது பணத்தை அனுப்பி விட்டால், அதனை எவ்வாறு திரும்ப பெற முடியும் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

RBI விதிமுறைகள்:

பொதுவாக சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை வங்கி சேவை வேண்டும் என்றாலும் பணம் எடுக்க வேண்டும் என்றாலும் ஒரு வாடிக்கையாளர் நேரடியாக வங்கி சென்று தான் அந்த சேவையை பெற முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் ONLINE BANKING, மூலம், வங்கிகள் நாம் இருக்கும் இடத்திற்கே வந்து, நமக்கு தேவையான சேவைகளை வழங்கி வருகிறது. இணைய வங்கி சேவை, மூலமாக ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் பணத்தை பரிமாற்றம் செய்யலாம்.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்’ – விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்து தள்ளிய நடிகை கஸ்தூரி!

வங்கியின் கணக்குகள் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். நமது கவனக்குறைவினால் மட்டுமே தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் பணத்தை ஏதேனும் தவறான கணக்கிற்கு மாற்றினால் அதற்காக கவலை அடைய தேவையில்லை. பணத்தை தவறான கணக்கிற்கு செலுத்தியது தெரிந்தவுடன் முதலில் நமது வங்கிக்கு தெரிவிக்க வேண்டும். வாடிக்கையாளர் சேவை மையத்தில் முழு விவரங்களையும் அறிவிக்க வேண்டும். வங்கிக்கு அதிகாரபூர்வமாக மின்னஞ்சல் அனுப்பும் படி கேட்கப்பட்டால் அதனை அனுப்ப வேண்டும். பரிவர்த்தனை தேதி மற்றும் நேரம், உங்கள் கணக்கு எண் மற்றும் பணம் மாற்றப்பட்ட கணக்கு எண் போன்ற அனைத்து விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.

பாரதி & கண்ணம்மா பிரிந்ததற்கு காரணமே பாக்கியா தான் – ரசிகர்கள் கமெண்ட்!!

செயல்பாட்டில் இல்லாத கணக்கிற்கு பணம் மாற்றப்பட்டால் தானாகவே உங்கள் கணக்கிற்கு செலுத்தப்படும். ஏடிஎம் அல்லது யுபிஐ அல்லது நெட் பேங்கிங் மூலம் நீங்கள் நிதி பரிவர்த்தனையை முடித்தவுடன்,உங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பும் முறையை ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது. “பரிவர்த்தனை தவறாக இருந்தால், தயவுசெய்து இந்த தொலைபேசி எண்ணுக்கு இந்த செய்தியை அனுப்பவும்” என்று ஒரு செய்தி பரிவர்த்தனைக்கு பின்னர் வரும். உங்கள் பரிவர்த்தனை தவறு அல்லது மோசடி என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் இந்த விருப்பத்தை பயன்படுத்தி நீங்கள் பணத்தை மாற்றவில்லை அல்லது தவறாக செய்தீர்கள் என்று குறிப்பிட்டு செய்தியை அனுப்பலாம்.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் – தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்!

தவறுதலாக பணத்தை பெற்ற நபர்கள் உங்கள் பணத்தை திருப்பித் தர மறுத்தால், அவர் மீது சட்டப்படி வழக்கு தொடர வழி உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களில், நீங்கள் தவறான பரிவர்த்தனை செய்திருந்தால்,பெறுநரின் கணக்கின் அனைத்து சரியான விவரங்களையும் வங்கியில் தெரிவிக்க வேண்டும். பெரும்பாலும், தவறான கணக்கில் பணம் அனுப்பியிருந்தால் உங்கள் பணம் யுபிஐ (UPI) மூலம் பற்று வைக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!