தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – முதல்வரின் முடிவு என்ன?

0
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் - முதல்வரின் முடிவு என்ன?
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் - முதல்வரின் முடிவு என்ன?
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – முதல்வரின் முடிவு என்ன?

கொரோனா தொற்று உலக நாடுகளில் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தமிழக மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். மேலும் மற்ற நாடுகளில் மீண்டும் பரவும் கொரோனா காரணமாக தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமோ? என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

மீண்டும் முழு ஊரடங்கு அமல்:

உலகத்தையே பெரும் அவதிக்கு உள்ளாகிய கொரோனா தாக்கம் தற்போது குறைந்து மக்களும் நிம்மதி அடைந்த இந்த நேரத்தில் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக கொரோனா சீனா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் அனைத்து அதிகாரிகளுடன் உலக அளவிலும், இந்திய அளவிலும் தற்போது கொரோனா தொற்றின் நிலை என்ன என்பதை பற்றி விவாதித்தார்.

TN Job “FB  Group” Join Now

மேலும் இந்த கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசி ஒன்றே முக்கியமானவை என குறிப்பிடப்பட்டு உள்ளது. அதனால் மாவட்ட வாரியாக தடுப்பூசி போட தகுதியானவர்களில், தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை குறித்த விபரங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். இந்நிலையில் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்வதுதான் சரியானவை, மற்ற நாடுகளில் தாக்கம் தீவிரமடைவதால் தொடர்ந்து தமிழகத்தில் பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கீழ்க்கண்ட கண்காணிப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தி உள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு? ஃபிட்மென்ட் காரணி அதிகரிப்பு! முழு விவரம் இதோ!

தமிழ்நாட்டில் தற்போது வரை, முதல் டோஸ் தடுப்பு ஊசி போடாத சுமார் 50 லட்சம் நபர்கள் மற்றும் 2ஆம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய சுமார் 1.32 கோடி நபர்களை கண்டறிந்து, அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து ‘மெகா’ தடுப்பூசி முகாம்களை முழுமையாக பயன்படுத்தி அவர்கள் தடுப்பூசி செலுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார். மேலும் 60 வயதுக்கு மேல் உள்ள நபர்களில் தடுப்பூசி போடாதவைகள் மீது முக்கிய கவனம் செலுத்தி, தடுப்பூசி போடுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!