அதிக பல்கலைக்கழகங்கள் இருக்கும் மாநிலங்களின் பட்டியல் – 7வது இடத்தில் தமிழகம்!

0
அதிக பல்கலைக்கழகங்கள் இருக்கும் மாநிலங்களின் பட்டியல் - 7வது இடத்தில் தமிழகம்!
அதிக பல்கலைக்கழகங்கள் இருக்கும் மாநிலங்களின் பட்டியல் - 7வது இடத்தில் தமிழகம்!
அதிக பல்கலைக்கழகங்கள் இருக்கும் மாநிலங்களின் பட்டியல் – 7வது இடத்தில் தமிழகம்!

நாடு முழுவதும் அதிகமான பல்கலைக்கழகங்களை கொண்டுள்ள மாநிலம் எது என்பது குறித்து AISHE எனப்படும் அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பு அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் தமிழகம் ஏழாம் இடத்தை பிடித்துள்ளது.

கணக்கெடுப்பு முடிவு

நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் அதிக பல்கலைக்கழகம் இருக்கும் மாநிலங்களின் பட்டியல் குறித்து அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பு அமைப்பு ஆய்வு மேற்கொண்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் படி இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமான மாணவர்கள் உயர்கல்வி பயின்று வருகின்றனர்.

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று (பிப்.4) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – கனமழை எதிரொலி!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அரசு மாணவர்களை உயர்கல்வி பயில ஊக்குவிப்பது போல பல திட்டங்களை அறிவித்துள்ளது. அதன் காரணமாக கல்லூரிகளில் அதிக மாணவர்கள் பயின்று வருவதாகவும் இது தேசிய சராசரியைக் காட்டிலும் தமிழ்நாட்டின் gross enrolment ratio மிக அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பல்கலைக்கழகம் அதிகம் இருக்கும் மாநிலங்கள் என்ற பட்டியலில் ராஜஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது. அதற்கு அடுத்த இரு இடங்களில் உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன.

மத்திய அரசின் இந்தப் பட்டியலில் 52 அரசுத் தனியார் பல்கலைக்கழகங்கள், 26 மாநில பப்ளிக் பல்கலைக்கழகங்கள், 7 டீம்ட் பல்கலைக்கழகங்களும், ராஜஸ்தானில் 92 பல்கலைக்கழகங்கள், உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 84 பல்கலைக்கழகங்கள், குஜராத் மாநிலத்தில் 83 பல்கலைக்கழகங்கள், மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் 72 பல்கலைக்கழகள், மகாராஷ்டிராவில் 71 பல்கலைக்கழகங்கள், தமிழகத்தில் 59 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. மத்திய அரசின் பட்டியலின் படி தமிழகம் ஏழாம் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!