TCS ஊழியர்களுக்கான ஷாக் அறிவிப்பு – முடிவுக்கு வரும் WFH முறை!

0
TCS ஊழியர்களுக்கான ஷாக் அறிவிப்பு - முடிவுக்கு வரும் WFH முறை!
TCS ஊழியர்களுக்கான ஷாக் அறிவிப்பு - முடிவுக்கு வரும் WFH முறை!
TCS ஊழியர்களுக்கான ஷாக் அறிவிப்பு – முடிவுக்கு வரும் WFH முறை!

இந்தியாவில் முன்னணி நிறுவனமான TCS நிறுவனத்தில் ஒர்க் ப்ரம் ஹாம் (WFH) ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஊழியர்களுக்கு முக்கிய அறிவுரைகளையும் வழங்கியுள்ளது.

WFH முறை

உலகம் முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு முதல் பரவிய கொரோனா பெருந்தொற்றால் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் அதிகரித்தது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அனைத்து நாடுகளும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை அறிவித்தது. இதனால் கடைகள் வணிக வளாகங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என அனைத்தும் மூடப்பட்டது. இந்த நிலையில் நிறுவனங்கள் தங்களது அலுவலக ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதி வழங்கினர். இதனையடுத்து ஊழியர்கள் கணினி, லேப்டாப், மொபைல் போன் ஆகிய சாதனங்களை பயன்படுத்தி வீட்டிலிருந்தே பணி புரிந்து வருகின்றனர்.

தமிழகத்தின் ‘இந்த’ பகுதிகளில் செப்.03ல் மின்தடை – மின்சார வாரியம் அறிவிப்பு!

முதன் முதலாக இந்தியாவின் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) ஐடி நிறுவனம் தான் ஊழியர்களுக்கு ஒர்க் ப்ரம் ஹோம் சலுகையை வழங்கியது. தற்போது கொரோனா பெருந்தொற்று குறைந்து நாட்டில் இயல்பு நிலை திரும்பி உள்ளதால் வீட்டிலிருந்து வேலை செய்யும் சலுகையை நிறுத்த முடிவு செய்துள்ளது. அத்துடன் TCS நிறுவனம் தனது ஊழியர்களை நவம்பர் முதல் அலுவலகத்திற்கு திரும்ப அழைக்கவும் முடிவு செய்துள்ளது. அந்நிறுவனமானது நவம்பர் 15 ஆம் தேதிக்குள் மீண்டும் அலுவலகத்தில் சேருமாறு ஊழியர்களை அதிகாரப்பூர்வமாகக் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த முடிவினால் TCS ன் ஒவ்வொரு பணியாளரும் அலுவலகத்திற்குச் சென்று தான் பணியாற்ற வேண்டும் என்ற நிலை உருவாகி உள்ளது. மேலும் டிசிஎஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக WFH ஆப்ஷனை நீக்கி உள்ளது. நிறுவனம் விரைவில் “ரிட்டர்ன்-டு-ஆஃபீஸ் மாடலைத் தொடரும், ஏனெனில் 25/25 திட்டத்தை மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் செயல்படுத்த வேண்டும் என்று அந்நிறுவன CEO தெரிவித்துள்ளார். 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் முழுமையாக தடுப்பூசி உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த அதிகார்பூர்வ அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!