இந்திய பெண்களுக்கு WFH திட்டம் அமல்? மத்திய அரசு விளக்கம்!

0
இந்திய பெண்களுக்கு WFH திட்டம் அமல்? மத்திய அரசு விளக்கம்!
இந்திய பெண்களுக்கு WFH திட்டம் அமல்? மத்திய அரசு விளக்கம்!
இந்திய பெண்களுக்கு WFH திட்டம் அமல்? மத்திய அரசு விளக்கம்!

இந்தியாவில் ஆகஸ்ட் 25, 26 ஆகிய தேதிகளில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் தொழிலாளர் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கான்பரன்சிங் வாயிலாக கலந்து கொண்ட பிரதமர் மோடி தொழிலாளர் நலன் குறித்த சில தகவல்களை தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் மாநாடு:

இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இதனை தொடர்ந்து அனைத்து தொழில்களும், தொழில் நிறுவனங்களும் தடையின்றி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டில் தொழிற்சாலைகள், தனியார் தொழில் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் வேலைவாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் தொழில் தொடங்குவதற்கான கடன் உதவிகளை வழங்கி வருகிறது.

மீண்டும் தொழிலை துவங்கும் பாக்கியா, மகிழ்ச்சியில் குடும்பத்தினர் – சீரியலில் அடுத்த புதிய திருப்பங்கள்!

இந்தியாவில் கடந்த 8 வருடங்களாக பல தொழிலாளர் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதன் மூலம் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம், சுகாதார காப்பீடு, மற்றும் பிற சலுகைகள் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தால் கொரோனா நெருக்கடி காலத்தில் 1.5 கோடி பேர் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து 2047 ம் ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டத்தை உருவாக்கும் முயற்சியில் தொழிலாளர் அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது. இந்த திட்டத்தில் வீட்டிலிருந்து பெண்கள் பணியாற்றும் வகையில் உகந்த பணிசூழல் ஏற்படுத்தப்படும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் ஆகஸ்ட் 25, 26 ஆகிய தேதிகளில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் தொழிலாளர் உச்சி மாநாடு ஆந்திர மாநிலத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி அவர்கள் கான்ப்ரன்சிங் வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் தொழிலாளர் நலன்கள் குறித்து சில தகவல்களை தெரிவித்துள்ளார். அதாவது புதிய தொழிலாளர் சட்டத்தின் மூலமாக வருங்கால வைப்பு நிதி, கிராஜ்விட்டி, அகவிலைப்படி, பயணப்படி மற்றும் ஹவுஸ் ரெண்ட் அலவன்ஸ் என அனைத்தும் 50%க்கு மேல் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை பார்க்கும் திட்டம் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!