தமிழக வருவாய்த்துறை சேவைகளுக்கான இணையதள வசதி – இனி இடைத்தரகர்களுக்கு சிக்கல்!

0
தமிழக வருவாய்த்துறை சேவைகளுக்கான இணையதள வசதி - இனி இடைத்தரகர்களுக்கு சிக்கல்!
தமிழக வருவாய்த்துறை சேவைகளுக்கான இணையதள வசதி – இனி இடைத்தரகர்களுக்கு சிக்கல்!

தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் வருவாய்த் துறை மூலமாக மக்களுக்கு தேவையான பட்டா வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி இந்த சேவைகளுக்கு ஆன்லைனில் இணையதள முகவரி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆன்லைன் முகவரி:

தமிழக வருவாய்த் துறை மக்களுக்கு அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவும், அரசின் பொருளாதார திட்டங்களை செயல்படுத்தவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த துறை மூலமாக பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான ஆவணங்கள், பட்டா, சிட்டா, அடங்கல், சாதிச்சான்று, இருப்பிடச் சான்று, வருமானச் சான்று போன்ற சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகிறது. நில உரிமையாளர்கள் பொது சேவை மையங்கள் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் மூலமாக விண்ணப்பித்து அதனை இணையதளம் மூலமாக பரிசீலனை செய்யப்பட்டு பட்டா மாறுதல் செய்யப்படுகின்றன.

அதற்காக https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளம் முகவரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் பொருட்டு வட்டாட்சியர் அலுவலகங்கள் / பொதுசேவை மையங்களுக்கு நேரடியாக சென்று அலைய தேவை இல்லை. மேலும் நில உட்பிரிவுக்கான கட்டணம் மற்றும் செயலாக்க கட்டணங்களை வங்கி மூலமாக செலுத்தாமல் இணையதளம் மூலமாகவே செலுத்திக் கொள்ளலாம். மேலும் பட்டா மாறுதல் முடிந்த பின் பட்டா உத்தரவின் நகல், பட்டா, புலப்படச்சுவடி போன்றவற்றையும் ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

ஓணம் லாட்டரி பணத்தால் நிம்மதியை இழந்த ஆட்டோ ஓட்டுநர் – ரூ.25 கோடி இப்படி புலம்ப வச்சுருச்சே!

Exams Daily Mobile App Download

இந்த வசதி மூலமாக பொதுமக்கள் நேரடியாக அலைவதும், இடைத்தரகர்களால் அவதிப்பட்டு பணத்தை இழப்பது உள்ளிட்ட இடையூறுகளை தவிர்க்கலாம். தமிழக வருவாய்த்துறை செயல்பாடுகள் 2014 முதல் 2017 ஆம் ஆண்டுகளில் கணினிப்படுத்தப்பட்டு தமிழ்நிலம் (நகர்ப்புரம்) என்னும் மென்பொருள் மூலமாக இணையவழிக்கு கொண்டுவரப்பட்டது. இதில் கணினிப்படுத்தப்பட்ட பிளாக் வரைபடங்களை, தனித்தனி நகரப் புலங்களுக்கான வரைபடங்களாக https://eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலமாக பொதுமக்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!