ஓணம் லாட்டரி பணத்தால் நிம்மதியை இழந்த ஆட்டோ ஓட்டுநர் – ரூ.25 கோடி இப்படி புலம்ப வச்சுருச்சே!

0
ஓணம் லாட்டரி பணத்தால் நிம்மதியை இழந்த ஆட்டோ ஓட்டுநர் - ரூ.25 கோடி இப்படி புலம்ப வச்சுருச்சே!
ஓணம் லாட்டரி பணத்தால் நிம்மதியை இழந்த ஆட்டோ ஓட்டுநர் - ரூ.25 கோடி இப்படி புலம்ப வச்சுருச்சே!
ஓணம் லாட்டரி பணத்தால் நிம்மதியை இழந்த ஆட்டோ ஓட்டுநர் – ரூ.25 கோடி இப்படி புலம்ப வச்சுருச்சே!

கேரளாவில் அரசே லாட்டரி டிக்கெட்களை விற்பனை செய்து வரும் நிலையில் இந்த ஆண்டிற்கான குலுக்கலில் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த அனுப் என்பவருக்கு ரூ. 25 கோடி பரிசுத் தொகை விழுந்தது. இந்நிலையில் பரிசு விழுந்து 5 நாட்கள் மட்டுமே ஆன நிலையில் பணத்தால் தன்னுடைய நிம்மதியை இழந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

லாட்டரி டிக்கெட்:

கேரள அரசு சார்பில் நடத்தப்பட்ட ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கலில் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ட்ரைவர் அனுப் என்பவருக்கு 5 நாட்களுக்கு முன் ரூ. 25 கோடி பரிசுத்தொகை விழுந்தது. ஒரே நாளில் அவர் கோடிஸ்வரன் ஆன செய்தி பல மாநிலங்களில் வைரலானது. மேலும் அவருக்கு ஏகப்பட்ட இடத்தில் இருந்து பாராட்டுக்கள் வந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் அனுப் அவர்களுக்கு வரி பிடித்தம் போக ரூ. 15 கோடியே 75 லட்சம் பணம் கிடைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் பரிசு விழுந்த லாட்டரி டிக்கெட்டை வங்கியில் டெபாசிட் செய்திருக்கிறார். குலுக்கல் நடைபெற்ற அன்று அவர் அளித்த பேட்டியில் இந்த பணத்தை கொண்டு வீடு கட்டுவேன் எனவும், ஏழைகளுக்கு உதவி செய்வேன் எனவும் தெரிவித்தார். ஆனால் பணம் கிடைத்ததாக செய்தி வெளியாகிய நாள் முதல் பலர் உதவிக் கேட்டு வருவதாகவும், உறவினர்களும், வீட்டுக்கு வந்து எங்களுக்கும் கொஞ்சம் பணம் வேண்டும் என சொல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

திருப்பதியில் செல்லும் பக்தர்களுக்கு இனி கவலையில்லை – தேவஸ்தானம் வெளியிட்ட புதிய தகவல்!

Exams Daily Mobile App Download

மேலும் கடைக்கு சென்றால் பொருளின் விலையை விட கூடுதலாக பணம் கேட்பதாகவும், ஆஸ்பத்திரி செலவுக்கு பணம் கொடுங்கள் என கேட்பதாகவும், அவர் கடுப்பில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். பணம் கிடைத்த நாள் முதல் வீட்டை விட்டு வெளியே வரவே பயமாக இருப்பதாகவும், தனது வீட்டை பூட்டிவிட்டு சகோதரியின் வீட்டில் மறைந்து வாழ்வதாகவும் அவர் தெரிவித்தார். பரிசு பணம் இன்னும் கைக்கு வரவில்லை அதற்குள் பலர் பணம் கேட்பதால் என்னுடைய நிம்மதியை இழந்துவிட்டேன் என வருத்தத்துடன் அனுப் தெரிவித்துள்ளார்.

மேலும் அவருடைய குழந்தைக்கு உடம்பு சரியில்லை எனவும், அவனை மருத்துவமனைக்கு கூட அழைத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். லாட்டரியில் 3-வது அல்லது 4-வது பரிசு விழுந்திருந்தால் கூட நிம்மதியாக இருந்திருப்பேன் என அனுப் தெரிவித்த நிலையில், இவ்வளவு பெரிய தொகைக்கு வரி செலுத்துவது எப்படி? அதனை எவ்வாறு நிர்வகிப்பது? என தெரியவில்லை என சொல்லி இருக்கிறார். மேலும் பணத்தை நிர்வகிக்க தொழில் வல்லுனர்களின் ஆலோசனை கேட்டு இருக்கிறேன். பணம் வந்ததும் அதை வங்கியில் டெபாசிட் செய்ய இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!