காத்திருப்பு பட்டியல் டிக்கெட்டுகள் ரத்து? – ரயில்வேக்கு இவ்வளவு லாபமா?

0
காத்திருப்பு பட்டியல் டிக்கெட்டுகள் ரத்து? - ரயில்வேக்கு இவ்வளவு லாபமா?

ரயில்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் காத்திருப்பு பட்டியலில் இருந்த டிக்கெட்டுகளை பயணிகள் ரத்து செய்ததன் மூலம் ரயில்வே அதிகமான வருமானம் வந்துள்ளது.

ரயில்வே அறிவிப்பு

இந்தியாவில் ரயில்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை கடந்த சில ஆண்டாக அதிகரித்து வருகிறது. பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் பல வழித்தடங்களில் கூடுதல் ரயில்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் காத்திருப்பு பட்டியலில் இருந்த டிக்கெட்டுகளை பயணிகள் ரத்து செய்ததன் மூலம் ரயில்வே நிர்வாகத்திற்கு ரூ. 1230 கோடி வருவாய் கிடைத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Cognizant நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரயில்வே அமைச்சகத்திடம் தகவல்களை பெற்றுள்ளார். அதில் 2021 ஆம் ஆண்டு 2கோடியே 53லட்சம் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு 242கோடியே 68லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. அதே போல 2022 ஆம் ஆண்டு காத்திருப்பு பட்டியலில் இருந்த 4கோடியே 60லட்சம் டிக்கெட்கள் ரத்து செய்யப்பட்டு ரூ.439.16 கோடியும், 2023ம் ஆண்டில் 5 கோடியே 26 லட்சம் டிக்கெட்டுகள் பயணிகள் ரத்து செய்யப்பட்டு ரூ .505 கோடி கிடைத்து இருப்பதாக தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!