வீல்சேரில் வீடு திரும்பினார் VJ அர்ச்சனா, ரசிகர்கள் நிம்மதி – வெளியான வீடியோ!

0
வீல்சேரில் வீடு திரும்பினார் VJ அர்ச்சனா, ரசிகர்கள் நிம்மதி - வெளியான வீடியோ!
வீல்சேரில் வீடு திரும்பினார் VJ அர்ச்சனா, ரசிகர்கள் நிம்மதி - வெளியான வீடியோ!
வீல்சேரில் வீடு திரும்பினார் VJ அர்ச்சனா, ரசிகர்கள் நிம்மதி – வெளியான வீடியோ!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கொடிகட்டி பறந்து வந்த அர்ச்சனா கடந்த சில மாதங்களாக விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் அவருக்கு மூளையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் நலமுடன் வீடு திரும்பியுள்ளார்.

அர்ச்சனா:

சின்னத்திரையில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக திகழ்ந்து வந்த அர்ச்சனா நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். அதுமட்டுமில்லாமல் அவர் Wow Life என்ற YouTube சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் அவர் போட்ட பாத்ரூம் டூர் சமூக வலைத்தளங்களில் வெகுவாக விமர்சிக்கப்பட்டது. மேலும் இதன் மூலம் அதிகம் எதிர்ப்பு மற்றும் ஆதரவுகளை இவர் பெற்றார்.

சரவணனை தன்வசப்படுத்தும் முயற்சியில் சந்தியா, பார்வதிக்கு மாப்பிள்ளை பார்க்கும் குடும்பத்தினர்!

தொடர்ந்து நிகழ்ச்சிகளில் இவர் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு சமீபத்தில் உடல் நிலை சரி இல்லாமல் சென்றது. இது குறித்து மருத்துவமனை சென்ற போது மூளையில் சிறு ஓட்டை உள்ளது அதனை அறுவை சிகிச்சை மூலமாகவே சரி செய்ய முடியும் என தெரிவித்துள்ளனர். இது குறித்த விளக்கத்தை தனது YouTube பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் அவரது மகள் 1 மாத காலமாக அந்த சேனலை நிர்வாகித்து வருகிறார்.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் தற்போது அர்ச்சனா அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் இருப்பதாகவும், அது குறித்த வீடியோ ஒன்றையும் தனது YouTube பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அதில் அர்ச்சனா நலமுடன் இருப்பதாகவும் தனக்காக வேண்டிக்கொண்ட ரசிகர்களுக்கும், சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தான் மறுஜென்மம் எடுத்துள்ளதாக நெகிழ்ச்சியான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அவர் வீல்சேரில் தனது வீட்டிற்கு வருகை தந்துள்ளார். அவர் முழுவதுமாக குணமடைய வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!