ரிஷப் பண்டின் பேட்டிங்கை பார்த்து நடனமாடிய விராட் கோஹ்லி – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

0
ரிஷப் பண்டின் பேட்டிங்கை பார்த்து நடனமாடிய விராட் கோஹ்லி - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
ரிஷப் பண்டின் பேட்டிங்கை பார்த்து நடனமாடிய விராட் கோஹ்லி - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
ரிஷப் பண்டின் பேட்டிங்கை பார்த்து நடனமாடிய விராட் கோஹ்லி – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய 2 வது ஒரு நாள் போட்டி நேற்று தென்னாப்பிரிக்காவில் உள்ள பார்ல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ரிஷப் பண்டின் அதிரடியாக விளையாடிய போது அவரது ஆட்டத்தை கண்டு கோஹ்லி நடனம் ஆடிய வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் வீடியோ பதிவு:

இந்தியா தென்னாபிரிக்கா இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து நேற்று தென்னாப்பிரிக்காவில் உள்ள பார்ல் மைதானத்தில் 2 வது ஒரு நாள் போட்டி இந்திய அணி தோல்வியடைந்து தொடரை கைப்பற்ற தவறியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் KL ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியின் தொடக்க வீரர்களாக KL ராகுல், ஷிக்கர் தவான் களம் இறங்கினர். நிதானமாக விளையாடிய தவான் 29 ரன்கள் எடுத்திருந்த போது மார்க்கம் பந்தில் அவுட் ஆனார்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மத்திய அரசின் புதிய செயலி அறிமுகம்!

பின்பு காலம் இறங்கிய முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி 1 ரன் கூட எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார். நேற்று போட்டியில் தென்னாபிரிக்கா அணி சிறப்பாக பந்து வீசியது. பின்பு களம் இறங்கிய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாட தொடங்கினார். சிக்சர் ,பௌண்டரிகளாக அடித்த பண்ட் 43 பந்துகளில் அரைசதம் அடித்தார். ரிஷப் பண்ட் பேட்டிங் நேற்று அனைத்து பார்வையாளர்களையும் ஈர்த்தது. மஹராஜ் பதில் ஒரு கையில் பேட்டை பிடித்து சிக்ஸர் அடித்த போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோஹ்லி ஓய்வு அறையில் நடனமாடினார்.

Post Office செல்வ மகள் சேமிப்பு திட்டம் – சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விபரங்கள் இதோ!

விராட் கோஹ்லியின் நடன வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று போட்டியில் விராட் கோஹ்லி டக் அவுட்டான போதும் ரிஷப் பண்டின் பேட்டிங்கை கண்டு உற்சாகமாக ஊக்குவித்தார். பண்டை ஊக்கவைக்கும் வகையில் இவர் நடனமாடிய வீடியோ முதலில் ட்விட்டரில் பரவியது. இந்திய அணி தோல்வி அடைந்தாலும் விராட் கோஹ்லியின் நடன வீடியோ ரசிகர்கள் மனதில் பதிவாகி மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!