ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மத்திய அரசின் புதிய செயலி அறிமுகம்!

0
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - மத்திய அரசின் புதிய செயலி அறிமுகம்!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - மத்திய அரசின் புதிய செயலி அறிமுகம்!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மத்திய அரசின் புதிய செயலி அறிமுகம்!

மத்திய அரசின் “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” திட்டத்தின் ஒரு பகுதியாக மேரா ரேஷன் செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியை பற்றிய முக்கிய அம்சங்களை இந்த பதிவில் காணலாம்.

மேரா ரேஷன் ஆப்:

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் மேரா ரேஷன் செயலியை இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு (ONORC) திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த செயலி செயல்படுகிறது. மேரா ரேஷன் செயலியானது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காகவும், அவர்கள் வேலைக்காக மாறிக்கொண்டே இருக்க வேண்டிய சூழல் இருப்பதால் எந்த இடத்தில் இருந்தும் பலனடைந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி தற்போது 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமலாக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாநிலங்கள் விரைவில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC தேர்வுகளுக்கான முக்கிய பதிவுகள் – விண்ணப்பத்தாரர்கள் கவனத்திற்கு..!

தற்போதைக்கு ஆண்ட்ராய்டு போன்களில் மட்டுமே இந்த செயலி கிடைக்கிறது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் பிடிஎஸ் எனப்படும் பொது விநியோக முறை மூலம் உணவு தானியங்களைப் பெறுவது வழக்கம். அவர்கள் புலம் பெயரும் சூழலில் ரேஷன் அட்டையின் நன்மைகளை பெறுவதில் அதிக சிக்கல்களை சந்திக்கின்றனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டதால் மத்திய அரசின் இந்த செயலியை கொண்டுவந்துள்ளது. தற்போது 10 மொழிகளில் செயலியின் பயன்பாடு வந்துள்ளது. விரைவில் மற்ற மொழிகளில் கிடைக்கும். அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும் நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரேஷன் சேவைகளை பெறலாம்.

அம்சங்கள்:

  • ரேஷன் கார்டு எண்ணை வழங்குவதன் மூலம் பயனர் தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
  • ரேஷன் கார்டு எண்ணை உள்ளிடுவதன் மூலம், பயனாளிகள் தங்கள் பரிவர்த்தனை விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
  • பயனாளி தனது மொபைல் எண் மற்றும் கார்டு எண்ணைப் பகிர்வதன் மூலம் வழங்கப்படும் சேவைகள் குறித்த கருத்துக்களை தெரிவிக்கலாம்.
  • பயனர்கள், தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள ரேஷன் கடைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
  • ஆதார் எண் அல்லது ரேஷன் கார்டு எண்ணைப் பயன்படுத்தி கார்டுதாரரின் ரேஷன் அளவுகளை அறிந்து கொள்ளலாம்.
  • ஆதார் எண் அல்லது ரேஷன் கார்டு எண்ணை பதிவு செய்து ஆதார் பதிவும் செய்து கொள்ளலாம்.
  • ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு வசதி உள்ள மாநிலங்களையும் பயனர் சரிபார்க்கலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!