தமிழகத்தில் 5ம் வகுப்பு முடித்தவர்களுக்கு கிராம உதவியாளர் வேலை – விண்ணப்பிப்பது எப்படி?

0
தமிழகத்தில் 5ம் வகுப்பு முடித்தவர்களுக்கு கிராம உதவியாளர் வேலை - விண்ணப்பிப்பது எப்படி?
தமிழகத்தில் 5ம் வகுப்பு முடித்தவர்களுக்கு கிராம உதவியாளர் வேலை - விண்ணப்பிப்பது எப்படி?
தமிழகத்தில் 5ம் வகுப்பு முடித்தவர்களுக்கு கிராம உதவியாளர் வேலை – விண்ணப்பிப்பது எப்படி?

தமிழகத்தில் கொரோனா வருகைக்கு பின்னர், வேலைவாய்ப்பு அறிவிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் தற்போது நிலைமை சீராகி வரும் இந்த சூழலில் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் காலியாக உள்ள ஐந்து கிராம உதவியாளர் பணிக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தாசில்தார் சசி தெரிவித்துள்ளார்.

கிராம உதவியாளர் வேலை:

தமிழ்நாடு அரசு அரசாணை எண்: 625, நாள்: 6.7.1995-ன் படி, கிராம உதவியாளர் பணியிடங்கள் தமிழகத்தில் தோற்றுவிக்கப்பட்டன. தமிழக அரசின் எந்தவொரு திட்டத்தின் பலனும், ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ஏழை, எளிய பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைய முக்கிய காரணமே கிராம உதவியாளர்கள் தான். எத்தகைய பேரிடர் காலத்திலும், சாதாரண நாட்களிலும் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றுபவர்கள் கிராம உதவியாளர்கள். வருடத்தின் 365 நாட்களும், அனைத்து தரப்பு மக்களும், ஏழை – பணக்காரன், சாதி, மதப் பாகுபாடின்றி அனைத்து மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ய அரசு கொண்டு வரும் திட்டங்களின் பலனை அவர்களிடம் கொண்டு சேர்க்க பணிபுரியும் உழைக்கும் மக்களே கிராம உதவியாளர்கள்.

10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்புகள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கான கிராம உதவியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா புதுார், தொப்பம்பட்டி, தும்பலப்பட்டி, அய்யம்பாளையம், தாளையூத்தில் உள்ள பணிகள் நிரப்பப்பட உள்ளது.

பதவியின் பெயர்: கிராம உதவியாளர் (Village Assistant )

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 5 பணியிடங்கள்

பணியிடம்: திண்டுக்கல் மாவட்டம்(பழனி)

விண்ணப்பதாரர் கல்வி தகுதி : 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்

விண்ணப்பதாரர் வயது வரம்பு: 21-37 க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்ப முறை: Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். தகுதியானவர்கள் கல்வி, வயது, இருப்பிடம், சாதி சான்றிதழ் நகல்களுடன் 15 நாட்களுக்குள் பழனி தாலுகா அலுவலகத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். காலதாமதமாக வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் விண்ணப்பத்தில் உரிய இடத்தில் ஒட்டப்பட்டு புகைப்படத்தின் மேல் பகுதியில் சுய சான்றொப்பத்துடன் விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

இப்பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் அந்த வட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். நிரந்தர முகவரிக்கு ஆதாரமாக வாக்காளர், அடையாள அட்டை , ஆதார் அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். மனுதாரரின் நிரந்தர முகவரி தொடர்பாக எழும் தெளிவின்மைகள் குறித்து பணி நியமன அலுவலரின் முடிவே இறுதியானது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!