விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கதிர் குமரன் செய்த சாதனை – குவியும் வாழ்த்துக்கள்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாண்டியன் ஸ்டோர்ஸ்" கதிர் குமரன் செய்த சாதனை - குவியும் வாழ்த்துக்கள்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கதிர் குமரன் செய்த சாதனை – குவியும் வாழ்த்துக்கள்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் குமரன். அவர் 𝗙𝗔𝗕 𝗦𝗧𝗔𝗥𝗦 𝗜𝗖𝗢𝗡𝗜𝗖 𝗔𝗪𝗔𝗥𝗗 நிகழ்ச்சியில் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார்.

நடிகர் குமரன்:

விஜய் டிவி சீரியல்களில் அதிகமான குடும்ப ரசிகர்களை கொண்ட சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில், கதிர் என்ற கேரக்டரில் நடித்து பிரபலமாக இருந்து வருபவர் நடிகர் குமரன் தங்கராஜன். நடன கலைஞரான இவர் முதன்முதலாக விஜய் டிவி ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின் கலைஞர் டிவி-யில் ஒளிபரப்பான மானாட மயிலாட 4 ஷோவில் அப்சராவுடன் ஜோடி சேர்ந்து நடனம் ஆடினார். பின் மானாட மயிலாட சீசன் 5-ல் சுஹாசினியுடன் ஜோடியாக நடனம் ஆடினார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை VJ சித்ராவின் ஒரு ஆண்டுகால நினைவலைகள் – ரசிகர்கள் கவலை!

அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அதன் பின் நடிக்க ஆர்வம் ஏற்பட அவர் விஜய் டிவி சீரியல்களில் நடித்திருக்கிறார். ஈரமான ரோஜாவே, மாப்பிள்ளை என பல தொடர்களில் நடித்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் கதாபாத்திரம் தான் இவரை அதிகம் பிரபலமாகியது. முதலில் விஜே சித்துவுடன் இவர் நடித்த காதல் காட்சிகளுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். அவர் மறைவிற்கு பின் காவ்யா அறிவுமணி உடன் ஜோடி சேர்ந்த குமரன் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார்.

பாரதி கண்ணம்மா சீரியலில் ரீ- என்ட்ரி கொடுக்கும் ரோஷினி – ரசிகர்கள் அதிர்ச்சி!

நடனம், நடிப்பு என இரண்டிலும் மாஸ் காட்டி வரும் இவர் 2021 ஆம் ஆண்டுக்கான 𝗙𝗔𝗕 𝗦𝗧𝗔𝗥𝗦 𝗜𝗖𝗢𝗡𝗜𝗖 𝗔𝗪𝗔𝗥𝗗 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் வெளியிட்ட அவர் கூறுகையில் “நாம ஜெயிச்சா ஆடப்போறதில்ல தோத்துட்டா வாடிரப்போறதில்ல எண்ணம்போல் மட்டுமே வாழ்க்கை” என கேப்சன் பதிவிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here