‘பாக்கியலட்சுமி’ ரித்திகா விஜய் டிவி சீரியல் நடிகையான கதை – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

0
'பாக்கியலட்சுமி' ரித்திகா விஜய் டிவி சீரியல் நடிகையான கதை - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
'பாக்கியலட்சுமி' ரித்திகா விஜய் டிவி சீரியல் நடிகையான கதை - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
‘பாக்கியலட்சுமி’ ரித்திகா விஜய் டிவி சீரியல் நடிகையான கதை – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

சினிமாவை சார்ந்திராத குடும்பத்தில் பிறந்து, சின்னத்திரை உலகில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி இருக்கும் விஜய் டிவியின் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகை ரித்திகா குறித்து இதுவரை அறியாத சில தகவல்களை இப்பதிவில் காணலாம்.

நடிகை ரித்திகா

சினிமா துறையில் ஒருவருக்கு புகழும் பெயரும் கிடைக்கிறது என்றால் அதற்கு பின்னால் அவர்கள் எடுத்துள்ள முயற்சி, சந்தித்த போரட்டம், ஏற்பட்ட அவமானம், தோல்விகள் தான் காரணமாக இருக்கும். சினிமாவை பொருத்தளவு உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஒவ்வொருவரும் முன்னொறு காலங்களில் பல எதிர்மறையான விமர்சனங்களையும், தோல்விகளையும் சந்தித்து வந்தவர்கள் தான். இது மறுக்க முடியாத உண்மை. சின்னத்திரையும் இதற்கு விதி விலக்கல்ல.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 இல் கலந்து கொள்ளாத ஷகிலா மகள் மிளா – இதுதான் காரணமா?

அந்த வகையில் வறுமை, வேலை என பல தடைகளை தாண்டி தற்போது ஒரு சிறந்த சின்னத்திரை நட்சத்திரமாக மக்கள் மத்தியில் ஜொலித்து வரும் விஜய் டிவியின் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகை ரித்திகாவை பற்றி இப்பதிவில் காணலாம். எந்தவொரு சினிமா பின்புலமும் இல்லாத நடிகை ரித்திகா கோயம்புத்துரை சேர்ந்தவர். தமிழ்செல்வி என்ற பெயர் கொண்ட ரித்திகாவுக்கு படிப்பு மீது ஆர்வம் இருந்தது. ஆனால் ரித்திகாவின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது.

தமிழ் மொழி மீது அதிகளவு ஆர்வம் கொண்ட ரித்திகா, அந்த படிப்பில் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என நினைத்திருந்தார். ஆனால் காலம் அவரை கலைத்துறைக்குள் கொண்டு வந்துள்ளது. இவர் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போதே பார்டைம் முறையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் வரவேற்பு பெண்ணாக வேலை பார்த்து வந்தார். இதன் மூலம் பலரது அறிமுகம் கிடைத்திருந்த நிலையில், லோக்கல் சேனலில் விஜேவாக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. இதனுடன் டிக்டாக்கில் அவ்வப்போது தனது நடிப்பு திறமையையும் அவர் வெளிப்படுத்தி இருந்தார்.

பார்வதியின் திருமணத்தை கெடுக்க பிளான் போடும் விக்கி, அர்ச்சனா – இன்றைய ‘ராஜா ராணி 2’ எபிசோடு!

இதன் மூலமாக தான் விஜய் டிவியின் ‘ராஜா ராணி’ சீரியலில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்த இவர் தற்போது மக்களின் பேவரைட்டாக மாறி இருக்கிறார். இவர் சன்டிவியின் ‘திருமகள்’, சாக்லேட் போன்ற சீரியலிலும் நடித்துள்ளார். தற்போது மீண்டுமாக விஜய் டிவியின் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அமிர்தாவாக நடித்து வரும் ரித்திகா அந்த கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்து வருகிறார். தவிர, ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வரும் ரித்திகா, நடிப்பின் இன்னொரு பரிமாணத்தை அதன் மூலம் வெளிப்படுத்தி ரசிகர்களிடம் கிளாப்ஸ் பெற்று வருகிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!