விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய தாமரைக்கு ஏற்பட்ட சோகம் – ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி 'பிக் பாஸ்' வீட்டில் இருந்து வெளியேறிய தாமரைக்கு ஏற்பட்ட சோகம் - ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி 'பிக் பாஸ்' வீட்டில் இருந்து வெளியேறிய தாமரைக்கு ஏற்பட்ட சோகம் - ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய தாமரைக்கு ஏற்பட்ட சோகம் – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி தனது இறுதி வாரத்தில் நுழைந்துள்ள நிலையில், நேற்றைய கடைசி எவிக்சனாக தாமரை செல்வி வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். இவரை பற்றி தகவல் தெரிய வந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தாமரை செல்வி:

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 4 சீசன்களில் இல்லாத அளவிற்கு மிகவும் ஸ்பெஷலாக இந்த முறை இருப்பதாக உலக நாயகன் கமல் பலமுறை முன்னதாக கூட இந்த சீசன் தொடக்கத்தில் இருந்து கூறி வருகிறார். போட்டியாளர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த போதும் கூட, எல்லாரும் சண்டை போட்டு கொஞ்ச நேரத்திலேயே மறுபடி நார்மல் ஆக பேச ஆரம்பித்து விடுகிறீர்கள். இது பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு என்று கூறி விட்டு சென்றனர். இதே போல் எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை முடித்து விட்டு சகஜமாக மாறி விட வேண்டும் என்றும் கூறினார்கள்.

தமிழகத்தில் ஜனவரி 11 முதல் முழு ஊரடங்கு நீட்டிப்பு, இ-பாஸ் அமல்? முதல்வர் இன்று ஆலோசனை!

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசன் தனது கடைசி வார பயணத்தில் நுழைந்துள்ளது. இறுதி வார போட்டியாளர்களாக பிரியங்கா, அமீர், ராஜு, பாவனி மற்றும் நிரூப் ஆகிய 5 பேர் மட்டுமே உள்ளனர். நேற்றைய கடைசி எவிக்சன் நடக்கும் போது பாவனி மற்றும் தாமரை இருவர் மட்டுமே கடைசியில் இருந்தனர். அதில், தாமரை தான் எலிமினேஷன் என்று கமல் அட்டையை காட்டியதும் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். தாமரை இறுதி வரை செல்ல வேண்டும் என்று பலரும் ஆசைப்பட்டனர். தாமரை நிகழ்ச்சியில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் தனது ஆசையும் கூட என்று கமல் நேற்று பலமுறை கூறிவந்தார்.

பொங்கலுக்கு ஊருக்கு போக திட்டமிடும் ராமமூர்த்தி, வர மறுக்கும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

தற்போது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்திருக்கும் தாமரை தெருக்கூத்து, நாடக கலைஞராக இருப்பவர். தனக்கு அதிக கடன் இருப்பதாக கூறி வருவார். பணப்பெட்டியில் 12 லட்சம் ரூபாய் இருக்கையில் சிபி கூட உனக்கு யூஸ் ஆகும். எடுத்துக்கோ என்று தாமரையை கூறினார். இந்த நிகழ்ச்சியின் வருமானம் மூலம் பாதி கடன் அடைந்து விடும் என்றும், தான் வெளியில் சென்று சம்பாதித்து பாதி கடனை அடைத்து விடுவேன் என்றும் கூறினார். ஏற்கனவே 95 நாட்களுக்கு மேலாக இருப்பதால் அவருக்கு பல லட்சம் வரை சம்பளமாக கிடைக்கும், அதன் பிறகும் கடன் இருக்கும் என்றும் கூறியுள்ளார். அந்த அளவிற்கு தாமரைக்கு கடன் இருப்பதை அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!