விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் நடிகர், நடிகைகள் ஒரு நாளைக்கு பெறும் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாரதி கண்ணம்மா" சீரியல் நடிகர், நடிகைகள் ஒரு நாளைக்கு பெறும் சம்பளம் - ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் நடிகர், நடிகைகள் ஒரு நாளைக்கு பெறும் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் டாப் சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் வில்லியை விட ஹீரோயின் அதிக சம்பளம் வாங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியல் நல்ல கதையுடன் விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருவதால் தொடர்ந்து மக்கள் மனதில் இடம் பிடித்த சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் கதை ஒருபக்கம் இருந்தாலும் இதில் நடிக்கும் நடிகர்கள் கதாபாத்திரங்களாக மாறி தங்களுடைய முழு பங்களிப்பையும் கொடுக்கின்றனர்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகிய வில்லி வெண்பா? கலர்ஸ் தமிழ் சேனலில் என்ட்ரி! ப்ரோமோ ரிலீஸ்!

அதுவே இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அருண் பிரசாத்:

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து வரும் அருண் பிரசாத் இதற்கு முன்னதாக சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அவருக்கு பாரதி கண்ணம்மா சீரியல் தான் பெரிய புகழை கொடுத்தது. சீரியலின் வெற்றிக்கு இவருடைய பங்களிப்பு முக்கிய காரணம். இந்நிலையில் அவர் சீரியலில் ஒரு எபிசோடிற்கு ரூ.20000 சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வினுஷா தேவி:

இந்த சீரியலில் தொடக்கத்தில் நடிகை ரோஷினி நடித்து வந்தார். அவர் சீரியலில் இருந்து விலகிய பின் அவர் சாயலில் இருக்கும் மாடல் அழகியான வினுஷா களமிறங்கினார். அவர் நடிக்க தொடங்கிய வாரம் முதல் தன்னுடைய நடிப்பால் சீரியலை தொடர்ந்து TRPயில் முன்னிலையில் வைத்து இருக்கிறார். இந்நிலையில் அவர் ஒரு எபிசோடிற்கு ரூ. 20000 சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாக உள்ளது.

ரூபாஸ்ரீ:

மாமியார் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக சீரியலில் சௌந்தர்யா
கதாபாத்திரத்தில் ரூபாஸ்ரீ நடித்து வருகிறார். அவருக்கு ஏகப்பட்ட பெண் ரசிகர்கள் இருக்கின்றனர். தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் இவர் நடித்து இருக்கிறார். இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு நாளைக்கு ரூ. 15,000 சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரிஷிகேஷ்

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமான இவர் தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோவின் அப்பாவாக வேணு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவரும் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் அந்த காதாபாத்திரமாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் இந்த சீரியலில் நடிக்க ஒரு நாள் சம்பளமாக ரூ. 12,000 வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஃபரினா ஆசாத்

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் நடிகை ஃபரினா. அவர் தொகுப்பாளராக இருந்தாலும் நடிப்பு திறமையை இந்த சீரியலின் மூலம் காட்டி இருக்கிறார். தன்னுடைய பிரசவ காலத்தில் கூட படப்பிடிப்பிற்கு வந்து நடித்து தமிழ் சின்னத்திரையில் இளம் வில்லியாக வெண்பா கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார். அவர் ஒரு நாளுக்கு பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ரூ. 10000 வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கண்மணி

பாரதிகண்ணம்மா தொடரில் துணை நடிகையாக நடிப்பவர் நடிகை கண்மணி. இவர் பாரதியின் தம்பி மனைவியாகவும் கண்ணம்மாவின் தங்கையாகவும் நடித்து வருகிறார். முதலில் வில்லத்தனம் செய்தாலும் தற்போது திருந்தி கண்ணம்மாவிற்கு ஆதரவாக இருக்கிறார். அதனால் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அவர் சீரியலில் நடிக்க ஒரு நாள் சம்பளமாக ரூ. 9000 வாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செந்தில்குமாரி

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் சித்தியாக நடிக்கும் செந்தில் குமாரி பல படங்களில் நடித்து பிரபலமானவர். அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கும் நிலையில் இந்த சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடித்து இருக்கிறார். அவருக்கு இந்த சீரியலில் நடிக்க ஒரு நாள் சம்பளமாக ரூ. 5000 வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!