![விஜய் டிவி விஜய் டிவி](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2022/03/விஜய்-டிவிC-5.jpg)
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் ராமமூர்த்தி தாத்தாவிற்கு நடந்த பரிதாபம் – ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் தாத்தாவிற்கு உடம்பு சரி இல்லாமல் இருக்கும் நிலையில் வீட்டில் பல பிரச்சனைகள் வந்துள்ளது. இந்நிலையில் அடுத்த வாரம் தாத்தா இறந்துவிடுவது போல கதை கொண்டு செல்ல இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகன் கோபி தனது அழகான குடும்பத்தை விட்டு தன்னுடைய கல்லூரி காதலி ராதிகாவை திருமணம் செய்ய நினைக்கிறார். இதனால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் வருகிறது. காரணமே இல்லாமல் பாக்கியாவை கோபி வெறுத்து ஒதுக்குகிறார். கோபியின் உண்மையான முகம் அவரது தந்தை ராமமூர்த்திக்கு தான் தெரியும், அது பற்றி அவர் உண்மையை சொல்லப் போகும் போது கால் தவறி கீழே விழுந்து விடுகிறார்.
‘ராஜா ராணி 2’ சீரியலில் இருந்து விலகும் ஆல்யா? அய்லா பிறந்தநாளும், வளைகாப்பும் ஒரே சமயத்தில்!
அவருக்கு தலையில் அடிபட்டு பக்கவாதம் ஏற்படுகிறது. அதனால் அவரால் பேச முடியாமல் போகிறது. இதை சாதகமாக பயன்படுத்தி கோபி பாக்கியாவை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார். அதற்காக எல்லா ஏற்பாடுகளும் முடிந்துள்ளது. ராமமூர்த்தி கோபி நடவடிக்கை பற்றி சந்தேகப்பட்டாலும் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதால், கோபியை யாராலும் தடுக்க முடியவில்லை. கோபி உண்மை எல்லாத்தையும் மறைத்து பாக்கியாவை விவாகரத்து செய்ய ஏற்பாடுகளை செய்கிறார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்த திருப்பம் – முல்லையுடன் இணைந்து கண்ணன் வெளியிட்ட வீடியோ!
இந்நிலையில் வீட்டில் பணப் பிரச்சனை இருப்பதால் அடிக்கடி சண்டை வருகிறது. இதை எல்லாம் பார்த்த ஈஸ்வரி நாம ஊருக்கே போய்விடலாம் என சொல்ல, இங்கே இருந்தால் தான் பாக்கியாவை காப்பாற்ற முடியும் என்பதால் போக கூடாது என ராமமூர்த்தி நினைக்கிறார். அவர் பாக்கியாவை பற்றி கவலைப்பட்டு உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்கு போகிறது. அதனால் அடுத்த வார எபிசோடுகளில் அவர் இறந்துவிட போகிறார். அதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.