‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்த திருப்பம் – முல்லையுடன் இணைந்து கண்ணன் வெளியிட்ட வீடியோ!
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு வரும் காவ்யா தற்போது கண்ணனுடன் இணைந்து ஒரு ரீலிஸ் செய்துள்ளார். அந்த விடீயோவினை காவ்யா தனது இன்ஸ்டாகிராம் வலை பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தற்போது தான் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. கூட்டு குடும்பத்தில் நடைபெறும் பாச போராட்டங்களை இந்த தொடர் சிறப்பாக மக்களுக்கு எடுத்து காட்டி கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் புது புது பிரச்சனைகள் வந்தாலும் குடும்பத்தில் உள்ள அனைவருமே ஒன்றாக இணைந்து அந்த பிரச்சனையை தீர்ப்பது தான் சீரியலின் மிக பெரிய பலமாகும்.
விஜய் டிவி பாரதி கண்ணம்மாவை பின்னுக்கு தள்ளிய சன் டிவி ‘கயல்’ சீரியல் – இந்த வார TRP ரேட்டிங்!
கடந்த சில வாரங்களுக்கு முன்பாகவே காதல் திருமணம் செய்துகொண்ட கண்ணனை குடும்பத்தினர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். தற்போது இந்த குடும்பத்தில் மற்றொரு பிரச்சனை முளைத்துள்ளது. அதாவது முல்லைக்கு குழந்தை பெரும் சக்தி இல்லை என்பதை கதிரிடம் மருத்துவர் கூறிவிடுகிறார். ஆனால் இந்த விஷயம் முல்லைக்கு தெரிந்துவிட்டால் முல்லையால் தாங்கிக்கொள்ள முடியாது என கதிர் உண்மையை யாரிடமும் கூறாமல் மறைத்து விடுகிறார். முல்லைக்கு குழந்தை பிறக்குமா பிறக்காதா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பிரபல நடிகர் துல்கர் சல்மான் என்ட்ரி!
இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து கொண்டிருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் படப்பிடிப்பு போக மீத நேரம் முழுவதையும் அரட்டை அடித்தே நேரத்தை போக்கி கொண்டிருக்கின்றனர். தற்போது முல்லை கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கும் காவ்யா, கண்ணனுடன் இணைந்து ஒரு ரீல்ஸ் செய்துள்ளார். தற்போது அந்த ரீல்ஸ் வீடியோவினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.