பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்ட செழியன், ஆதரவாக பேசிய எழில் – இன்றைய எபிசோட்!

0
பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்ட செழியன், ஆதரவாக பேசிய எழில் - இன்றைய எபிசோட்!
பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்ட செழியன், ஆதரவாக பேசிய எழில் - இன்றைய எபிசோட்!
பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்ட செழியன், ஆதரவாக பேசிய எழில் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகா கோபி கையை பிடித்துக் கொண்டு மண்டபத்தில் இருந்து வெளியே செல்கிறார். மறுபக்கம் இனியா செழியனிடம் விவரத்தை சொல்ல, செழியனால் அதை தாங்கி கொள்ள முடியவில்லை. அவர்கள் பாக்கியாவை புரிந்து கொள்ள, எழில் வந்து பாக்கியாவிற்கு ஆறுதலாக இருக்கிறார்.

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகா கையை இறுக்க பிடித்துக் கொண்டு மண்டபத்தில் இருந்து கிளம்புகிறார். அப்போது மாடியில் இருந்து செல்வியும், பாக்கியாவும் அதை பார்க்க, செல்வி எல்லாம் 2 நாட்கள் தான் உன்னை போல ராதிகா அவரை பார்த்துக் கொள்வாரா என பார்ப்போம், நீ கவலைப்படாதே என செல்வி சொல்கிறார். பின் பாக்கியா வேலைக்கு வந்தவர்களை அனுப்பிவிட்டு அவரும் கிளம்புகிறார். மறுபக்கம் இனியா ஈஸ்வரி தாத்தா என அனைவரும் வீட்டிற்கு வர, செழியனை பார்த்து இனியா அண்ணா என அழுது கொண்டே செல்கிறார். என்னாச்சு என செழியன் கேட்க, டாடி அந்த ராதிகா ஆன்டியை திருமணம் செய்து கொண்டார் என அழுது கொண்டே சொல்கிறார்.

நாங்க போறதுக்குள்ள தாலி கட்டிட்டார், இனிமேல் அவர் நம்ம டாடி இல்லை என இனியா சொல்ல, செழியன் பாட்டி நீங்க தடுத்தும் கேட்கவில்லையா என கேட்கிறார். உடனே ஈஸ்வரி உங்க தாத்தா சொன்னது போல அவன் சுயநலம் தான் அவனுக்கு முக்கியம் என சொல்கிறார். ஜெனியால் அதை நம்பமுடியாமல் இருக்க, தாத்தா அவன் இன்னும் நிறைய பண்ணுவான் என சொல்கிறார். பின் ஈஸ்வரி அதே மண்டபத்தில் பாக்கியா சமைத்து கொண்டிருக்கிறாள், அவளுடைய நிலைமையை யோசித்து பார் என சொல்ல, ஜெனி ஆன்டி எங்கே என கேட்கிறார். இந்த குடும்பத்திற்காக அவள் மிகவும் கஷ்டப்படுவதாக தாத்தா சொல்கிறார்.

டாடியை 2 நாட்களுக்கு முன்னாடி கூட பார்த்தேன் எல்லாமே பொய் என இனியா சொல்லி அழுகிறார். பின் பாக்கியா செல்வி பணம் வாங்கி கொண்டு வீட்டிற்கு வருகிறார்கள். பாக்கியா செல்வியை கிளம்ப சொல்லிவிட்டு வீட்டிற்கு வர, அங்கே செழியன் அம்மா என அழுது கொண்டே வருகிறார். நீ செய்தது தான் சரி அவர் இவ்வளவு மோசமாக இருப்பார் என தெரியவில்லை என சொல்லி அழுகிறார். பாக்கியா செழியனை சமாதானம் செய்ய ரொம்ப கஷ்டமாக இருக்கிறதா என கேட்கிறார். ஆமாம் என சொல்லி செழியன் அழுகிறார். இனிமேல் அவரிடம் நான் பேசமாட்டேன் என செழியன் சொல்கிறார்,

தென் தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு – தீபாவளியை ஒட்டி சிறப்பு ஏற்பாடு!

பின் ராதிகா கோபி வீட்டிற்கு சென்று கொண்டிருக்க, ராதிகா நடந்ததை எல்லாம் நினைத்து கோவமாக இருக்கிறார். பின் அவர்கள் வீட்டிற்கு வர அக்கம் பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். ஆரத்தி எடுத்து உள்ளே செல்ல, ராதிகா கோவமாக இருக்கிறார். சந்துரு சிரிக்க சொல்ல ,போலியாக சிரித்துவிட்டு எழுந்து செல்கிறார். மறுபக்கம் கோபி புகைப்படத்தை பார்த்து பாக்கியா வருத்தப்பட்டு அழுகிறார். அப்போது ஈஸ்வரி வந்து பார்க்க, பாக்கியாவை நினைத்து வருத்தப்படுகிறார். இனிமேல் எதையும் யோசிக்காதே என சொல்லி ஈஸ்வரி சமாதானம் செய்கிறார். உனக்கு நான் இருக்கேன், உன் மாமா இருக்காங்க, உன் பிள்ளைங்க இருக்காங்க என சொல்லி சமாதானம் செய்கிறார்.

எதுவும் தெரியாமல் எழில் வேலை முடிந்து வர, பாக்கியா வேலை நல்லபடியாக முடிந்ததா என கேட்கிறார். அப்போது பாக்கியா முடிந்ததாக சொல்ல, எழில் மாடிக்கு சென்று கிளம்ப செல்கிறார். அப்போது இனியா அழுது கொண்டே நடந்ததை சொல்ல, எழில் கீழே வந்து பாக்கியாவிடம் அழுது கொண்டே பேசுகிறார். அங்கே கோபி புகைப்படம் இருக்க அதை கையால் அடித்து நொறுக்குகிறார். பின் நீ கவலைப்படாதே உனக்கு நாங்க இருக்கிறோம் என சொல்கிறார். இனியா ஈஸ்வரிக்கு எழில் ஆதரவாக இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!