ராதிகாவிடம் கோபியை பிரிப்பேன் என சவால் விட்ட இனியா.. இனியாவிற்கு நிலைமையை புரிய வைக்கும் எழில் – இன்றைய எபிசோட்!

0
ராதிகாவிடம் கோபியை பிரிப்பேன் என சவால் விட்ட இனியா.. இனியாவிற்கு நிலைமையை புரிய வைக்கும் எழில் - இன்றைய எபிசோட்!
ராதிகாவிடம் கோபியை பிரிப்பேன் என சவால் விட்ட இனியா.. இனியாவிற்கு நிலைமையை புரிய வைக்கும் எழில் - இன்றைய எபிசோட்!
ராதிகாவிடம் கோபியை பிரிப்பேன் என சவால் விட்ட இனியா.. இனியாவிற்கு நிலைமையை புரிய வைக்கும் எழில் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியா ராதிகாவிடம் என் அப்பாவை பிரித்து கூட்டிக் கொண்டு செல்வேன் என சவால் விடுகிறார். பின் பாக்கியா வந்ததை நினைத்து கவலைப்பட்டு வீட்டிற்கு செல்கிறார். அங்கே எழில் சமாதானம் செய்தும் கேட்காமல் துணிகளை எடுக்க வந்ததாக சொல்லிவிட்டு மீண்டும் கிளம்ப குடும்பத்தினர் வருத்தப்படுகின்றனர்.

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியா ராமமூர்த்தியிடம் பேசிக் கொண்டிருக்க ராதிகா வந்து நானும் உன் அப்பாவும் கல்யாணம் செய்து கொண்டிருக்கிறோம் அப்பறம் எப்படி உன் அப்பாவை அழைத்து கொண்டு செல்வாய் என கேட்கிறார். உடனே இனியா அப்பாவிற்கு அம்மாவை தான் பிடிக்காது எங்களை எல்லாம் பிடிக்கும் எங்களுக்காக வருவார் என சொல்கிறார். என்ன பேசுகிறாய் நீ என ராதிகா கேட்க, உடனே ராமமூர்த்தி அவள் தான் சின்ன பொண்ணு எதோ பேசுகிறாள் விட வேண்டியது தான என சொல்கிறார். பின் ராதிகா அவள் பேசுவதை கேட்டீர்களா என சொல்ல, இனியா நீங்க பாருங்க என சொல்லிவிட்டு ராமமூர்த்தியை அம்மாவை பார்க்க அழைத்து செல்ல சொல்கிறார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

உடனே ராதிகா உன் அப்பா இல்லாத நேரத்தில் போக கூடாது என சொல்ல, ஆனால் இனியா அதை காதில் வாங்காமல் செல்கிறார். மறுபக்கம் ஈஸ்வரி கோபி செய்ததை நினைத்து கோவமாக இருக்க, செழியன் எழிலிடம் சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார். பாக்கியா அடுப்படியில் நின்று கோபி மீது உள்ள கோவத்தில் சப்பாத்தி மாவை பிசைந்து கொண்டிருக்கிறார். அப்போது இனியா வர ஈஸ்வரி செழியன் அவளை பார்த்து சந்தோசப்படுகிறார்கள். பின் பாக்கியா ஓடி வந்து உனக்கு ஒன்றும் ஆகவில்லையே என கட்டி அணைத்து தன்னுடைய பாசத்தை காட்டுகிறார்.

பின் இனியா நான் பொருள்களை எடுத்துக் கொண்டு போக தான் வந்தேன் என சொல்ல, உடனே செழியனும் எழிலும் அதை கேட்டு அதிர்ச்சி அடைகின்றனர். பின் இனியா மாடிக்கு சென்று துணிகளை எடுத்து வைக்கிறார். அப்போது ஜெனி வந்து நீ இங்கையே இருக்கலாமே என சொல்ல, ஆனால் இனியா அதை காதில் வாங்கவில்லை. பின் எழில் வந்து இனியாவிற்கு புரிய வைக்க நினைக்கிறார். ஆனால் அப்பா பாவம் தான என இனியா சொல்கிறார். அவர் நீ இல்லாமல் இருக்கமாட்டார் என்றால் அங்கே போயிருக்க மாட்டார் என எழில் சொல்ல, ஆனால் இனியா கேட்பதாக இல்லை.

UPSC தேர்வர்களின் கவனத்திற்கு.. காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு – வெளியான அறிவிப்பு!

மறுபக்கம் கோபி வீட்டிற்கு வருகிறார். ராதிகாவிடம் கோபி மயூரா பற்றி பேசிவிட்டு, அப்பா வீட்டில் இல்லையா என கேட்க, ராதிகா இல்லை என சொல்கிறார். பின் இனியாவும் இல்லை என சொல்ல நீ என்ன செய்தாய் என கோபி கேட்கிறார். உடனே ராதிகா எனக்கு வேற வேலையே இல்லையா என கேட்க, உடனே ராதிகா அவள் என்னிடம் சண்டை போட்டு தான் சென்று இருப்பதாக சொல்கிறார். ராதிகா அவள் உங்களை அவங்க வீட்டிற்கு கூட்டிக் கொண்டு செல்ல போகிறாளாம் என சொல்ல கோபி அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். பின் இனியா நான் கிளம்புகிறேன் என ஈஸ்வரியிடம் சொல்லிவிட்டு கிளம்ப ஈஸ்வரி இனியா மீது கோவமாக இருக்கிறார். பாக்கியா என்ன செய்வது என தெரியாமல் வருத்தப்பட்டு இருக்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!