UPSC தேர்வர்களின் கவனத்திற்கு.. காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு – வெளியான அறிவிப்பு!

0
UPSC தேர்வர்களின் கவனத்திற்கு (2)
UPSC தேர்வர்களின் கவனத்திற்கு (2)
UPSC தேர்வர்களின் கவனத்திற்கு.. காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு – வெளியான அறிவிப்பு!

UPSC தேர்வாணையம் நடப்பு ஆண்டுக்கான Engineering Services தேர்வுக்கான அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது. இந்த தேர்வின் கீழ் உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

UPSC:

இந்தியாவில் IAS, IPS உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் UPSC தேர்வை நடத்தி வருகிறது. இந்த தேர்வானது முதல் நிலை, முதன்மை தேர்வு என்று 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் UPSC -இன் முதன்மைத் தேர்வு நடைபெற்றது. இதன் முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் UPSC (Engineering Services) தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2022

இந்த தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.upsc.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த அக்டோபர் 4ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இந்த நிலையில் UPSC (Engineering Services) தேர்வின் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. ஏற்கனவே காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 327 ஆக இருந்த நிலையில் தற்போது Indian Skill Development Service துறைக்கு 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக UPSC தெரிவித்துள்ளது. அதனால் காலிப்பணியிடங்களின் 337 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Download Notification – Click Here
Vacancy Increase Notice – Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!