விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்து தான் பௌலராக மாறினேன் – மனம் திறந்த வருண் சக்கரவர்த்தி!

0
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்து தான் பௌலராக மாறினேன் - மனம் திறந்த வருண் சக்கரவர்த்தி!
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்து தான் பௌலராக மாறினேன் - மனம் திறந்த வருண் சக்கரவர்த்தி!
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்து தான் பௌலராக மாறினேன் – மனம் திறந்த வருண் சக்கரவர்த்தி!

இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் நட்சத்திர வீரராக தனது சிறப்பான பங்களிப்பை இந்திய அணிக்கு அளித்து வரும் வருண் சக்கரவர்த்தி, தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்து பந்து வீச்சாளராக மாறிய தகவலை தற்போது பகிர்ந்துள்ளார்.

வருண் சக்கரவர்த்தி

இந்திய கிரிக்கெட் அணியில் கலந்து கொண்டு விளையாடி வரும் தமிழகத்தை சேர்ந்த பல வீரர்கள் கிரிக்கெட்டின் பல்வேறு வடிவிலான ஆட்டங்களிலும் கோலோச்சி வருகின்றனர். அதன் கீழ் மூத்த வீரரான அஷ்வின், இளம் நட்சத்திரங்களான வாஷிங்க்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, தினேஷ் கார்த்திக், நட்ராஜன் ஆகியோர் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆற்றிய பங்களிப்பு அளப்பரியதாகும். வாய்ப்புகள் அதிகம் கிடைக்காத போதிலும் கூட, கிடைக்கும் ஒரு சில தருணங்களை சிறப்பாக செயல்படுத்தும் உன்னத திறனை தமிழக வீரர்கள் பெற்றுள்ளது முக்கியமான ஒன்றாகும்.

சட்டசபை பொன்விழா நாயகன்’ முதல்வர் புகழாரம் – கண்ணீர் விட்ட துரைமுருகன்!

இப்படிப்பட்ட வீரர்களின் திறமையை கண்டு கொள்ளும் வகையில் நடத்தப்படும் IPL போட்டிகள் ஒருவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு பாலமாக அமைகிறது என்றால் மிகையாகாது. அந்த வகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற IPL போட்டியின் 13 ஆவது சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடிய தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி தனது சிறப்பான ஆட்டத்தால் கவனம் ஈர்த்திருந்தார். அவரது பந்து வீச்சின் அபார திறமையால் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்திற்கான இந்திய T 20 அணியில் இடம்பிடிக்கும் அரியதொரு வாய்ப்பு கிடைத்தது.

TN Job “FB  Group” Join Now

ஆனால் அப்போது ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான T 20 தொடரில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தும், யோ யோ பிட்சன்ஸ் டெஸ்டில் தோல்வியுற்றதால் அணியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து இந்திய அணியின் இலங்கை சுற்றுப் பணத்திற்கான அணியில் மீண்டும் இடம் பிடித்த வருண் சக்ரவர்த்தி சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 28 ரன்களை மட்டும் கொடுத்து, 1 விக்கெட்டையும் கைப்பற்றினார். இதனையடுத்து சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தனது சர்வதேச விளையாட்டு அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

அப்போது, ‘சர்வதேச போட்டி துவங்குவதற்கு முந்தய நாள் எனக்கு தூக்கம் வரவில்லை. இந்திய அணிக்காக விளையாடுவது என்பது எனது கனவு. அது நிறைவேறிய மகிழ்ச்சியில் அப்போது இருந்தேன். தொடர்ந்து T 20 போட்டியில் பங்கேற்பதற்கு முன்பு வீரர் தினேஷ் கார்த்திக்கிடம் பேசினேன். அவரது அனுபவம் எனக்கு ஊக்கமாக இருந்தது. நான் பௌலராக மாறுவதற்கு முன்பு, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தான் எனது கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கினேன்’ என கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!