காவலர் ஆவது உங்கள் கனவா? CISF இல் 1149 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
காவலர் ஆவது உங்கள் கனவா? CISF இல் 1149 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
காவலர் ஆவது உங்கள் கனவா? CISF இல் 1149 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
காவலர் ஆவது உங்கள் கனவா? CISF இல் 1149 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வாயிலாக மார்ச் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு:

இந்தியாவில் மத்திய மாநில அரசு துறை பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலம் தேர்தெடுக்கபட்டு தகுதியானவர்களை கொண்டு நிரப்பப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கினால் போட்டித் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. தற்போது பாதிப்பிலிருந்து மீண்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் மத்திய மாநில அரசுகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது.

TN TRB ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான தகுதித்தேர்வு – தீவிர கட்டுப்பாடுகளுடன் தொடக்கம்!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மற்றும் சிவில் சர்வீஸ் தேர்வுகளான (UPSC) போன்ற தேர்வுகளை நடத்த திட்டமிட்டது. அதனை தொடர்ந்து தற்போது மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1149 காவலர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் 18 வயது முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும். 12ம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தில் சூடுபிடிக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – பணப்பட்டுவாடாவில் களமிறங்கிய கட்சிகள்!

மேலும் உயரம் – 170 செ.மீ மார்பளவு – 80 – 85 செ.மீ உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். உடற்தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலமாக தகுதியுடையோர் தேர்ந்தெடுக்கப்படுவர். ஊதியமாக மாதம் 21,700 – 69,100வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.cisfrectt.in/ என்ற இணையதளம் வாயிலாக மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!